கோவை கொண்டு செல்லப்பட்ட மூளை.. இறப்பிலும் உயிர்வாழ வைத்த மனித நேயம்..
மதுரையில் மூளை சாவு அடைந்தவரின் இதயம் திருப்பூரில் நோயாளி வருவதற்கு பொருத்துவதற்காக 2 மணி நேரம் 45 மணி நிமிடங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இந்நிலையில் அவரது இதயம் கோவை பிஎஸ்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆயத்தமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து காலை 10:30 மணிக்கு இதயத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று கிளம்பி உள்ளது.
தொடர்ந்து ஆம்புலன்ஸை மருத்துவக் குழு ஒன்று பின்தொடர்ந்துள்ளது. மதுரை திண்டுக்கல் திருப்பூர் என மூன்று மாவட்டங்களை கடந்து கோவைக்கு பிற்பகல் 1.15 மணிக்கு சென்றடைந்தது. திருப்பூர் மாவட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்த உடன் தாராபுரம், குண்டடம், பல்லடம், காரணம் பேட்டை போன்ற இடங்களில் போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தி ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
இதையும் படிங்க: அம்மா அம்மா தான்.. இறப்பிலும் பலருக்கு வாழ்வு தந்த தாய்..!
பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே இந்த ஆம்புலன்ஸ் பெரிய சவாலாக இருந்ததாக மருத்துவ குழு தெரிவித்தனர். ஆனாலும் போக்குவரத்து போலீசாரின் முன்னேற்பாடுகளால் கூட்ட நெரிசலில் சிக்காமல் இதயம் பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு இதயம் பத்திரமாக பொருத்தப்பட்டது.
இது குறித்து மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் மற்றும் சிவகுமார் ஆகியோர் கூறுகையில், அவரது குடும்பத்தினரின் நல்ல மனம் காரணமாக உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. மேலும் கோவையில் மூன்று வாரங்களாக இதயம் செயலிழந்து உயிருக்கு போராடி வந்த நோயாளிக்கு மாற்று இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.மேலும் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் உடல் தானம் செய்தவரின் குடும்பத்தினற்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மதுரைவாசிகளே..! நாய், பூனை வளர்க்க இனி காசு கட்டணும்..! மாநகராட்சி அதிரடி..!