×
 

நத்தத்தில் கலைக்கல்லூரி... அரகண்டநல்லூரில் சிப்காட்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்...! 

பட்ஜெட் அறிவிப்புகளில் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். 

பட்ஜெட் அறிவிப்புகளில் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர் இவர்களின் மேற்படிப்பிற்காக திண்டுக்கல்,மதுரை,திருச்சி,சிவகங்கை மாவட்டங்களில் மேல்படிப்பை தொடர உள்ள நிலையில் தங்களுக்கு நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டு காலமாக பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக பட்ஜெட்டில் நத்தத்தில் கலை கல்லூரி அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்ததை எடுத்து நத்தம் பேருந்து நிலையம் எதிரே பொதுமக்கள் பட்டாசுகள் விடுத்தும் இனிப்புகள் கொடுத்தும் மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

இதையும் படிங்க: திடீரென வெடித்து சிதறல்.. சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் காயம்.. மூட்டையில் பதுக்கி இருந்த மர்ம பொருள்..?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர் அருகே அமைந்துள்ள நாயனூர் கிராமத்தில் சிட்கோ நிறுவனம் அமைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மற்றும் திமுகவினர் இணைந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

மேலும் சட்டப்பேரவையில் சிட்கோ நிறுவனம் அமைப்பதாக அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பொன்முடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பிரதிநிதித்துவம்... மாற்றுத்திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share