×
 

Budget 2025: வருமான வரி எப்போது அறிமுகம்? ஆங்கில நாளேட்டின் நிறுவனருக்கும்-பட்ஜெட்டுக்கும் சம்பந்தம் என்ன?

வரிச் சலுகை இருக்குமா, வருமானவரி விலக்கு கிடைக்குமா, வரிவீதத்தில் மாற்றமா, என்னென்ன புதிய திட்டங்கள், திட்ட நிதி ஒதுக்கீடு, உள்ளிட்ட பெரிய எதிர்பார்ப்புக்களுக்கு இடையேமத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாரான்.

பிப்ரவரி1ம் தேதி தனது 8-வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.  இந்தியா சுதந்திரம் அடைந்தபின் கடந்த 1947ம் ஆண்டிலிருந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இதுவரை 73 முறை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,14 முறை இடைக்கால பட்ஜெட்டும், 4 முறை சிறப்பு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை பொதுபட்ஜெட்டின் முதல்நாளில் ரயில்வேதுறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 


ஆனால், ரயில்வே பட்ஜெட்டை கடந்த 2016ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டோடு மோடி அரசு இணைத்தது. அது முதல் ரயில்வேக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இருந்து வருகிறது. ஏறக்குறைய 1924ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டுவந்த ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை 90 ஆண்டுகளுக்குப்பின் மோடி அரசு முடிவுக்கு கொண்டு வந்தது.
மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார நிலை, வருவாய் இனங்கள், செலவினங்கள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், புதிய அறிவிப்புகள், ஏழைகளுக்கான சலுகைகள், நிதிக்கொள்கைகள் அடங்கியிருக்கும். 
பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் வந்தது அல்ல, சுதந்திரத்துக்கு 87 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை வழக்கில் இருக்கிறது.


இந்தியாவில் முதல் மத்திய பட்ஜெட் 1860 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி, இந்திய கவுன்சிலின் நிதி உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். பிரிட்டனில் வெளிவரும் “ தி எக்னாமிஸ்ட்” நாளேட்டை நிறுவியதும் ஜேம்ஸ் வில்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கத்தில் இந்தியா இருந்தது, 1857ம்ஆண்டு சுதந்திரத்துக்கான முதல் போர் என்று அழைக்கக்கூடிய முதல் சிப்பாய் கலகம் நடந்தபின், ஆங்கிலேய நிர்வாகம் சந்தித்த பொருளாதார நெருக்கடி, நிதிநெருக்கடியின் எதிரொலியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், முதல் சிப்பாய் கலகம் தோல்வி அடையவே, இங்கிலாந்து ராணி விக்டோரியா, உத்தரவின்படி, ஜேம்ஸ் வில்சன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு நிதி சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தார். புதிய வரி முறை, புதிய பேப்பர் கரன்சியை ஜேம்ஸ் வில்சன்தான் கொண்டு வந்தார். ஜேம்ஸ் வில்சன்தான் இந்தியாவில் முதல்முறையாக வருமான வரி என்பதை அறிமுகப்படுத்தினார். இன்றளவும் அரசுக்கு பெரிய வருமானத்தை வருமானவரிதான் கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க: கவலை கொள்ளாத தமிழக அரசு! அதிகரித்துவரும் கடன், வருவாய் பற்றாக்குறை!


பிரிட்டிஷ் நிர்வாகமே முதன்முதலில் நேரடி வரியை நாட்டில் அறிமுகம் செய்தது, ஆனால், அறிமுக காலக்கட்டத்தில்  எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பது தெரியவில்லை. ஜேம்ஸ் வில்சன் வருகைக்கு முன் லைசென்ஸ் டேக்ஸ் பில் என இருந்தது. இதன் தனித்தன்மை, விதிகள் மோசமாக இருந்ததால், வில்சன் அதை மாற்றி அமைத்தார்.  வருமான வரி மற்றும் திருத்தப்பட்ட லெசென்ஸ் டேக்ஸ் ஆகியவற்றை வில்சன் அறிமுகம் செய்தார்.
வில்சனின் முதல் பட்ஜெட் அறிவிப்பில் “ ஆண்டுக்கு ரூ.200க்கும் குறைவாக ஊதியம் ஈட்டுவோருக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு” எனத் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் தணிக்கை முறை, ஆங்கில முறை, ஒவ்வொரு மாதமும் அரசு சார்பில் செலவிடப்படும் தொகையை சரிபார்த்தல், ஆய்வு செய்தலை ஜேம்ஸ் வில்சன்தான் கொண்டு வந்தார். இந்தியா சுதந்திரம் அடையாத காலத்தில் குறுகிய காலமே வந்திருந்த வில்சன் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்தார்.


இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1947ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. முதல் பட்ஜெட்டை ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: ‘புதிய வருமானவரி மசோதா’ : பட்ஜெட் கூட்டத்தில் மத்திய அரசு அறிமுகம்? முக்கியத்துவம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share