×
 

விரைவில் வேலூர் - சென்னை இடையே விமான சேவை இயக்கம்.. மத்திய அமைச்சர் தகவல்

உதான் திட்டம் மூலம் வேலூர் சென்னை இடையே விரைவில் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த உடன் உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள சிறு விமான நிலையங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.  அதன்படி மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வேலூர் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு 20 பயணிகள் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி வேலூர் விமான நிலையத்தில் 850 மீட்டர் நீளம் உள்ள விமான ஓடுதள பாதை, விமான நிலையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலையை அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள்  தீவிர படுத்தப்பட்டுள்ளதாக பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தனர். மேலும் இப்பகுதியில் விமானங்கள் பரப்பதற்கும், தரை இறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் 25 அடி உயரத்திற்கும் மேல் உள்ள கட்டிடங்கள், மரங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டு அதனை நீக்கி  வேலூர் விமான நிலையத்தை தயார் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஏன் 2.10 கோடி டாலர்கள் வழங்க வேண்டும்: நிதியை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு

முன்னதாக விமான ஓடுதள பாதையில் விமானத்தை இறக்கி வெற்றிகரமாக சோதனை செய்த பிறகே உருமத்திற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த உரிமம் கிடைக்கப்பெற்று விமான சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராமோகன் நாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர், வேலூர் சென்னை இடையே விமான சேவைக்கு உரிமம் கிடைத்தவுடன் விமான விமானம் இயக்கப்பட உள்ளதாகவும், இத்திட்டத்தை சேலம், வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கத்தார் மன்னரை வரவேற்க, பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்றது ஏன்? ..இதுதான் காரணம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share