டாஸ்மாக் ED ரெய்டுக்கு எதிரான வழக்கு.. சென்னை ஐகோர்ட் வேண்டாம்.... உச்சநீதிமன்றத்தில் அரசு மனு..!
டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிராக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் விலகிய நிலையில், எஸ்.எம்.சுப்ரமணியம், ராஜசேகர் அமர்வு விசாரிக்கிறது. வரும் 8,9 தேதிகளில் இறுதி வாதம் நடத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் அமர்வை மாற்றக்கோரி மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டது நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க கூடாது, என மாற்றக்கோரி முறையிட்டு இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை அவசரமாக பட்டியலிடக் கோரி, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி இன்று இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல! வேற வேலைய பாருங்க! டெல்லியில் பட்டாசுக்கான தடை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு...
அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிராக அரசு தாக்கல் செய்த முந்தைய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுப்பப்பட்டுள்ளன என்றும், இந்த இடமாற்ற விஷயத்தையும் அதனுடன் பட்டியலிட வேண்டும் என்றும் சவுத்ரி கூறினார்.
ED நடத்திய சோதனைகள் அரசியல் நோக்கில் நடத்தப்பட்டவை என்பதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ED விசாரணை முறைகேடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதால், மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.
அரசியலமைப்பின் பிரிவு 139A இன் கீழ் (ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கும்) அரசு அணுகியுள்ளதாக அவர் கூறினார். அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிராக அரசு தாக்கல் செய்த முந்தைய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுப்பப்பட்டுள்ளன என்றும், இந்த இடமாற்ற விஷயத்தையும் அதனுடன் பட்டியலிட வேண்டும் என்றும் சவுத்ரி கூறினார்.
இந்த விஷயத்தை பட்டியலிட தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார். ஆனால் திங்கட்கிழமை விசாரணைக்கு வருமா தெரியாது. வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசு மற்றும் டாஸ்மாக் தானே முன் வந்து சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக்கோருவது விநோதமாக உள்ளது. இதற்கான தகுந்த காரணத்தை தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வைக்கவேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்காமல் இருக்க கோருவதற்கு நியாயமான காரணம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என்பதே சட்ட நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: 25,000 அரசு பள்ளி ஆசிரியர்கள் டிஸ்மிஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!