×
 

அடங்காத அட்டூழியம்... ஆபாசமாக பெண்ணை திட்டிய திமுக எக்ஸ் துணைத் தலைவர்: பாய்ந்தது வழக்கு..!

பெண்ணை ஆபாசமாக திட்டிய முன்னாள் திமுக ஊராட்சி துணைத்தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெண்ணை ஆபாசமாக திட்டிய முன்னாள் திமுக ஊராட்சி துணைத்தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர், கன்னிமார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி சிவகாமி பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

 கடந்த 16ஆம் தேதி இவரது பழக்கடைக்கு வந்த முன்னாள் பெருமாநல்லூர் ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி (திமுக நிர்வாகி) பழக்கடையை அகற்றுமாறும் டேபிளை எடுக்குமாறும் ஆபாச வார்த்தைகளால் சிவகாமியை திட்டி உள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சாபக்கேடு... 'டூப்' போலீஸ் அண்ணாமலை- வறுத்தெடுத்த சேகர்பாபு..!


 
இதுகுறித்து சிவகாமியின் கணவர் குமார் , வேலுச்சாமியிடம் கேட்ட போது, அவரையும் ஆபாசமாக திட்டி உள்ளார்.  இதையடுத்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் சிவகாமி அளித்த புகாரின் பேரில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக வேலுச்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


 

இதையும் படிங்க: 'ஸ்டாலினை அதிமுகவில் இருந்து வந்த இன்றைய திமுகவினர் பாதுகாப்பார்கள்'- கே.எஸ்.ஆர் சூசகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share