×
 

முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மிரட்டல்... மத்திய அமைச்சர் மீது திமுக பகீர் குற்றச்சாட்டு.!

ஹிட்லரின் மனப்பான்மையை குடியரசுத் துணைத் தலைவரின் பேச்சு காட்டுகிறது என்று திமுக தலைமை செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேசியக் கல்விக் கொள்கை என்பது சட்டம் அல்ல. அதனால் தமிழகம் மீது அதைத் திணிக்க முடியாது. அதிகாரங்களின் பட்டியலில் கல்வி அரசியலமைப்பு சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே, மாநில அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி திட்டங்களில் மாற்றங்களையே கொண்டு வர முடியும்.

இந்தியத் துணைக் குடியரசு தலைவரின் பேச்சு ஹிட்லரின் மனப்பான்மையைக் காட்டுகிறது. கொடுங்கோலர்கள் பலரும் இதைத்தான் செய்து பார்த்தார்கள். அதனால், துணைக் குடியரசுத் தலைவர் தன்னை ஒரு கொடுங்கோலர் என காட்டிக் கொள்வதற்காக இப்படி சொல்லி இருக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட்டால்தான் தமிழ்நாட்டுக்கு ரூ.2000 கோடி கிடைக்கும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி மிரட்டி இருக்கிறார். மேலும் கல்வியில் அரசியல் செய்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வியில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார்.

மதத்தை பிரச்சாரம் செய்ய, மனுதர்மத்தை பிரச்சாரம் செய்ய, வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் திணிக்க ஒரு ஏற்பாடாக புதிய கல்விப்கொள்கையை கொண்டு வர பார்க்கிறார்கள். இதுதான் பா.ஜ.க அரசின் எண்ணம். நேர்மையற்ற ஓர் ஆட்சி இருக்கும் போது திருட்டுத்தனமாக சிலவற்றை பாஜக அரசு செய்ய முயற்சி செய்து வருகிறது” என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கல்வி நிதியை தராவிட்டால் கெட் அவுட் மோடிதான்... மத்திய அரசை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share