×
 

எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 6 ஆண்டுகளில் ரூ.10,443 கோடி.. ஆர்டிஐ தகவல்..!

எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 6 ஆண்டுகளில் ரூ.10,443 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது.

சமக்ர சிக்ஸா அபியான் (எஸ்ஏஸ்ஏ) திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.10443 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டுதான் தமிழகத்துக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் வைத்திருந்தது. இது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவும் உடனடியாக நிதியை தமிழத்துக்கு விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு கடைசி தவணையாக மத்திய அரசிடம் இருந்து எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 2023-24ல் ரூ.1871 கோடி வழங்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு தனது பங்கான ரூ.2152 கோடி நிதியைதான் நிறுத்திவைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையியல் மும்மொழித் திட்டத்தை ஏற்க தமிழக அரசு மறுத்ததைத் தொடர்ந்து நிதி நிறுத்தப்பட்டது. இருப்பினும் 2024-25 திட்டத்துக்காக ரூ.3586 கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள்.. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..!

2018ல் சர்வசிக்ஸா அபியான் திட்டம் பெயர் மாற்றப்பட்டது, எஸ்எஸ்ஏ திட்டத்துடன் இணைக்கப்பட்டது. 2018-19ல் மத்திய அ ரசு தமிழகத்துக்கு ரூ.1474 கோடியும், 2023-24ல் தமிழக அரசு ரூ.1871 கோடியும் இந்தத் திட்டத்தில் விடுவிக்கப்பட்டது. இந்த 5 ஆண்டு காலத்தில் 26% நிதி உயர்த்தப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசின் பங்கு நிதி வழங்காதத்தைத் தொடர்ந்து அதன் பங்குத்தொகையான ரூ.2,152 கோடியை தமிழக அரசே ஒதுக்க முடிவு செய்தது. இந்த நிதியின் மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியம், பயிற்சித் திட்டம், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு, போக்குவரத்து ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுகிறது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் மத்திய அரசின் பங்களிப்பு நிதி வழங்கவில்லை. இதைச்சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையில் இந்த 3 மாநிலங்களுக்கும் விரைந்து எஸ்எஸ்ஏ பங்களிப்பு நிதியை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. பிரதமர் ஸ்ரீ திட்டத்துக்கும் எஸ்எஸ்ஏ திட்டத்துக்கும் தொடர்பில்லை என்பதால் மத்திய கல்வி அமைச்சகம் விரைவில் நிதியை விடுவிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது.

இதையும் படிங்க: விருதுநகரில் மட்டும் ரூ.112 கோடி மோசடி..! 100 நாள் ஊரக வேலை திட்டத்தில் அம்பலம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share