திருச்சி உக்கிரமாகாளியம்மன் கோயில் தேர் திருவிழா.. 100 ஆடுகள் பலியட்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள்..!
திருச்சி உக்கிரமாகாளியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற குட்டிக்குடி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மகிஷாசுரனை வதம்செய்த கோலத்தில் எட்டுகரங்களுடன் அம்மன் வடக்குதிசையைநோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும், திருச்சி மாநகரின் தென்னூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற உக்கிரமாகாளியம்மன் ஆலயத்தின் ஆண்டு தேர்திருவிழா கடந்த மார்ச் 19ம்தேதி காப்புக்கட்டுதல் மற்றும் அம்மன் குடியமர்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் காளிவட்டம் நிகழ்ச்சியும், ஓலைத்தேரில் அம்மன் திருவீதிஉலா வரும் வைபவமும், அதனைத் தொடர்ந்து முக்கியநிகழ்வான குட்டிக்குடி திருவிழா இன்று நடைபெற்றது. வண்ணப் பூக்களால், ஓலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைத் தேரில் உக்கிரமாகாளியம்மன் எழுந்தருளி அனைத்து வீதிகளிலும் உலா வந்து பின்னர் தென்னூர் மந்தையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க,
இதையும் படிங்க: பங்குனி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!
கருப்பண்ணசாமி மற்றும் உக்கிரமாகாளியம்மன் அருள்பெற்று மருளாளி பிரபாகரன் பக்தர்களால் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை குடித்து பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பலியிடப்பட்ட ஆடுகளைக்கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர். விழாவையொட்டி மாநகர போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: களத்தை அதிரவிட்ட காளைகள்.. அடங்க மறுத்த காளைகளை மடக்கிப் பிடித்த மாடுபிடி வீரர்கள்..