×
 

சென்னை மணலியில் திடீர் பூகம்பமா? கதிகலங்க செய்த சிலிண்டர் வெடிப்பு.. மரண பயத்தில் ஓடிய மக்கள்..!

சென்னை மணலியில் பயோ கேஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலி

சென்னை மணலி சின்ன சேக்காடு அருகே உள்ள பல்ஜி பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ காஸ் தயாரிப்பு ஆலை உள்ளது. இங்கு சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளில், திடக்கழிவுகளை பிரித்து அதில் இருந்து பயோ காஸ் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

நேற்று பயோ கேஸை கண்ட்ரோல் செய்யும் அறையில் மெஷின் ஆப்ரேட்டர்களாக சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாஸ்கரன், சரவண குமார் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதையும் படிங்க: ஆவணப்படவிழாவுக்கு தயாராகும் சென்னை... வரும் 21-ந் தேதி தொடங்கி 28 வரை நடக்கிறது..

இரவு 10 மணிக்கு மெஷினை ஷட்டவுன் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென காஸ் டேங் வெடித்து சிதறியது. பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. அலுவலகத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்தது. மணலியில் பூகம்பம் ஏற்பட்டது போல சுற்றுவட்டார பகுதியே குலுங்கியது.

தகவல் அறிந்த மணலி போலீசார் மற்றும் மணலி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்தனர். அப்போது இடர்பாடுகளில் சிக்கி சரவணன் உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கித் தவித்த பாஸ்கரனை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளை நீக்கி விட்டு சரவண குமார் சடலத்தை மீட்டனர்.

சிலிண்டர் வெடித்த அதிர்ச்சியில் பக்கத்து குடியிருப்பில் இருந்த மொத்த வீடுகளும் குலுங்கியதால், தூங்கிக்கொண்டிருந்த மக்கள் பதறியடித்து வெளியே வந்தனர். பயோ காஸ் மையத்தில் விபத்து ஏற்பட்டதை அறிந்த குடியிருப்புவாசிகள் மீட்பு பணிக்கு உதவி செய்தனர். தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற கோடி தொழிற்சாலை முன்பு அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ கேபி சங்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விபத்துக்கான காரணம் குறித்து மணலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தந்தையை அடித்தே கொன்ற அன்பு மகன்..! பரிதாபமாக உயிரிழந்த போலீஸ் எஸ்ஐ.. சென்னையில் பரபரப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share