×
 

சென்னை கடைகளுக்கு வந்த புது சிக்கல்… மாநகராட்சியின் அதிரடி முடிவு!!

சென்னை மாநகராட்சிய் செயல்பட்டு வரும் கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காமல் இருந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மாநகராட்சி நிர்வாகம் புதிய முடிவை எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை வைத்திருப்பது கட்டாயம் என்ற நிலையில் அதனை யாரும் பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களில் ஏராளமான கடைகள், வணிகவளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல கடைகளில் ஆங்கில, இந்தி பெயர் பலகைகள் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி கடையின் பெயர்களும் ஆங்கிலம் அல்லது இந்தியில் பெரிதாகவும் தமிழில் சிறியதாகவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விதிமுறைகளின்படி, தமிழ் எழுத்து பெரிதாகவும் முதலிலும் குறிப்பிட்ட பின் சிறிய எழுத்துகளில் பிறமொழிகளில் எழுத வேண்டும் என்றிருக்கும் நிலையில் சில கடைகளில் தமிழ் மொழியிலேயே கடைப்பெயர் எழுதப்படாமல் உள்ளது. இதுக்குறித்து புகார்கள் எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கான அதிரடி ரெய்டை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: மகா சிவராத்திரி விழாவில் எல்லா விதிகளும் பின்பற்றப்படுகின்றன.... நீதிமன்றத்தில் சான்றளித்த தமிழக அரசு..!!

மேலும் கடைகளின் பெயர்பலகைகள் வைக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மூத்த அதிகாரிகளுடன் இந்த வாரம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் விதிகள் 2023ன்படி கடைகளில் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை இடம்பெற செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. அதன்பிறகு தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் உரிமம் என்பது ரத்து செய்யப்பட உள்ளது.

அதாவது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் விதிகள் 2023ன்படி பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம் அடுத்ததாக மூன்றாவது ஏதாவது ஒரு மொழியில் முறையே 5:3:2 என்ற அளவில் கடைகளின் பெயர் என்பது இருக்க வேண்டும். இதில் விதிமீறும் கடைக்காரர்களின் உரிமம் என்பது ரத்து செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக விரைவில் கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு என்பது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கடைகளின் பெயர் பலகை விதியின்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி அதிகாரிகள் ரெய்டு செய்து கடைகளின் பெயர் பலகை அடிப்படையில் வியாபாரத்துக்கான உரிமத்தை ரத்து செய்ய உள்ளனர்.

இதையும் படிங்க: ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா..? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share