இன்ஸ்பெக்டரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்.. சாட்சி சொல்ல வர முடியாதா என கேள்வி..!
கஞ்சா வழக்கில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.
கஞ்சா வழக்கில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளரை கைது செய்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை சி.வி.எம்.நகரைச் சேர்ந்த சதீஷ், பரத் ஆகியோரை விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் எடை கொண்ட 150 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அப்போதைய விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகத்திற்கு, சாட்சியம் அளிக்க பலமுறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையும் படிங்க: தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளத் தயார்.. விடுவிக்கக்கோரிய மனுவை திரும்ப பெற்ற இபிஎஸ்..!
இதைத்தொடர்ந்து அவருக்கு வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ள சென்னை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், அவரை கைது செய்து வருகிற 26-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா வழக்குகளில் கைதான 4 பேர் விடுதலை.. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் விளக்கம்..!