×
 

வந்தாச்சு லோக்கல் ட்ரெயினில் ஏசி.. இனி சென்னை முழுக்க குளு, குளு பயணம்.. ஆனா ஒரே ஒரு சிக்கல்!

சென்னையில் முதல் குளர்சாதன புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் முதல் முறை: 

தமிழ்நாட்டில் முதல் புறநகர் குளிர்சாதன ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கக்கூடிய இந்த ரயில் சேவை செங்கல்பட்டு வரை செல்ல உள்ளது. தினமும் இரண்டு ரயில்கள் வீதம் தினமும் ஆறு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் மும்பை கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பயன்படுத்தும் புறநகர் ரயில் சேவையாக சென்னை புறநகர் ரயில் சேவை இருந்து வருகிறது. சுமார் 25 லட்சம் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உட்பட ஆந்திரா வரை இந்த சேவையானது விரிவடைகிறது. ஆயிரம் ரயில்கள் வரை இயக்கப்பட்டு வரும் நிலையில்,  விரைவில் குளிர்சாதன ரயில் சேவையும் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதற்காக ஐசிஎப் தொழிற்சாலையில் இதற்கென பிரத்தியேக ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டன. 

இதையும் படிங்க: 11 மாதங்களில் முதல்வரே அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகப் போகிறார்...விளாசிய தமிழிசை!

ஏசி ரயிலில் வசதிகள் என்ன? 

இந்நிலையில் இன்று காலை 7 முதல் சென்னை கடற்கரையிலிருந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலை போலவே இந்த குளிர்சாதன ரயில் ரயிலிலிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.  

இந்த ஏசி மின்தொடர் ரயில் தற்போது மத்திய மற்றும் மேற்கு ரயில்வேயில் இயங்கும் மின்தொடர் ரயில்களை விட குறைந்த நேரத்தில் அதிக வேகத்தை எட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ரயில், அவசர காலத்தில் ரயில் ஓட்டுனருடன் பேசி கொள்ளும் அமைப்புடன் கூடிய முதல் குளிர்சாதன மின்தொடர் ரயில் ஆகும்.

ரயில் இயக்கப்படும் நேரம் என்ன? 

சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு காலை 8.35 மணிக்கு செங்கல்பட்டை சென்றடைகிறது. அதே நேரத்தில் காலை 9 மணிக்கு செங்கல்பட்டையிலிருந்து இந்த ரயில் மீண்டும் புறப்பட்டு 10.35க்கு சென்னை கடற்கரையை வந்தடைகிறது. மாலை நேரத்தை பொறுத்தவரையில் மாலை 3:45 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும், இந்த ரயில் மாலை 5:25க்கு செங்கல்பட்டு ரயில் நிலத்தை சென்றடைகிறது. அதே மாலை 5:45 மணிக்கு செங்கபட்டவிலிருந்து புறப்பட்டு மீண்டும் இரவு 7:15 மணிக்கு கடற்கரைக்கு வந்தடைகின்றது. 

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையுமே இந்த ரயில் சேவை என்பது நீட்டிக்க வரக்கூடிய சூழ்நிலையில், சென்னை கடற்கரையில இருந்து இரவு 7:35 கூறப்படும் ரயில் இரவு தாம்பரத்திற்கு 8:30 மணிக்கு சென்று அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிக்கெட் கட்டணம் எவ்வளவு? 

சென்னை புறநகர் குளிர்சாதன ரயிலில் குறைந்தபட்சக் கட்டணமாக 35 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 105 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவில் பயணிக்க ரூ.10 குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: கோடிகளில் கொடுக்கப்பட்ட ஆஃபர்.. அமித் ஷாவால் மனம் மாறிய நக்சல்கள்.. 11 பெண்கள் உட்பட 33 பேர் சரண்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share