கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கு.. 12 பேர் கைது.. 3 பேருக்கு மாவுக்கட்டு.. சேலத்தில் பதுங்கியவர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!
சென்னை கோட்டூர்புரம் அருகே நேற்று முன்தினம் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 25). சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, அருண் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் ஒன்றாக மது குடித்துள்ளனர். பின்னர் போதை அதிகமானதும், கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்தே உறங்கி உள்ளனர். அப்போது சுமார் 10 மணி அளவில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் மர்ம கும்பல் இருவரையும் சரமாறியாக வெட்டி கொலை செய்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தது தெரிந்தது. இதனால் காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண் சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளான். ஆனால் இந்த தகவல் சுக்கு காபி சுரேஷுக்கு முன் கூட்டியே தெரிந்து விட்டது. இதனால் சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு அருண் குமாரை கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கொலை செய்து தப்பிச் சென்ற 10க்கும் மேற்பட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்,
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? வாகன ஓட்டிகளை ஏமாற்றிய நிதின் கட்காரி!!
இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக கோட்டூர்புரம் தனிப்படைப்பு போலீசார்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சேலம் விரைந்த தனிப்படை போலீசார் கொலை செய்ய உதவிய நபர்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து 12பேரையும் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ரவுடி சுரேஷ் என்கிற சுக்கு காபி சுரேஷ், விக்னேஷ், சண்முகம், ஜீவன், ராசுக்குட்டி என்கிற செல்வகணபதி, மனோஜ் என்கிற கரன், சாம் ஜெபஸ்டின், பிரேம்குமார், சாம் ஆகியோர் நேரடியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும்,லோகேஷ் குமார் என்ற மிக்கி, தருண் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் கொலைக்கு உடனடியாக இருந்ததும் தெரியவந்தது.
மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 12 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர், இந்தநிலையில் அதில் எட்டு பேரை நீதிமன்ற காவலில் அடைப்பதற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும் நான்கு பேரிடம் தொடர் விசாரணையில் போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை பிடிப்பதற்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் என்கிற சுக்கு காபி சுரேஷ் உட்பட மூவர் போலீசார் பிடிக்கும் என்ற போது தப்பி ஓடி கீழே விழுந்ததில் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து மாவு கட்டுப் போட உள்ளதாக போலீசார் தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்த பின்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 8 பேரும் சிறையில் அடைக்கப்படுபவர்கள் எனவும் மீதமுள்ள நான்கு பேரிடமும் எவ்வாறு கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள்? கொலைகாண முழு காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை தாக்கிய கள்ளக்காதலன்.. கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன்.. மருத்துவமனை வாசலில் அரங்கேறிய சம்பவம்..!