பாலியல் புகார்... சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் டி.மகேஷ்குமார் பணியிடை நீக்கம் ...!
சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் டி.மகேஷ்குமார் பணியிடை நீக்கம்
பெண் காவலர் அளித்த பாலியல் புகாரில் சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை காவல் துறையில் வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ்குமார் ஐபிஎஸ். இவர் மீது ஒரு பெண் காவலர் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவானது அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் போக்குவரத்து இணை ஆணையராக பணிபுரிந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இந்த நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: பார்வைத்திறன் குறைபாடு +2 மாணவர்கள்... கணினி வழியில் தேர்வு எழுத நடவடிக்கை...
இதையும் படிங்க: அப்படி என்னதாங்க இருக்கு புதிய வருமானவரி மசோதாவில்.. .