பார்க்கிங் பண்ண சொன்னது குத்தமா..! எஸ்பிஐ காவலாளி மீது கொலைவெறி தாக்குதல்..!
சென்னை விருகம்பாக்கத்தில் எஸ்பிஐ வங்கி காவலாளி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் நம்பர் ஒன் பொதுத்துறை வங்கியாக இருப்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி. இந்த வங்கி இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி என்பது ரிசர்வ் வங்கியின் முகமையாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது எஸ்.பி.ஐ.,
இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் காவலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரங்கநாதன். இவர் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டபோது, எஸ் பி ஐ ஏ டி எம் ஐ பணம் எடுப்பதற்காக இரண்டு பேர் BMW இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வாசனையே வாகனத்தை நிறுத்தி விட்டதால் பார்க்கிங்கில் நிறுத்துமாறு காவலாளி ரங்கநாதன் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஜெ. வலது கரத்தை விசாரிக்கிறது போலீஸ்..! எடப்பாடிக்கு சிக்கலா..? கொலை கொள்ளை வழக்கில் மர்மம்..!
அதனைக் கேட்ட இரண்டு பேரும் வாசலில் தான் நிறுத்துவேன், உன்னால் என்ன செய்ய முடியும் என கூறிவிட்டு பணம் எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது பைக்கை பார்க்கிங்கில் நிறுத்துவதற்காக ரங்கநாதன் நகர்த்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேரும் ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சரமாரியாக அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ரங்கநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் காவலாளி ரங்கநாதன் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதன்முறை.. பிரதமரின் 'லக்பதி தீதி' விழா... பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ் மட்டுமே..!