சிறுபான்மை சகோதரர்கள் உரிமைகளை பாதுகாப்போம்..! உச்சநீதிமன்றத்துக்கு முதலமைச்சர் நன்றி..!
வக்ஃபு திருத்த சட்ட மசோதா வழக்கில் இடைக்கால உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், வக்பு திருத்த சட்டப்படி எந்த நில வகைப்படுத்தலும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டனர். வக்ஃபு திருத்த புதிய சட்டப்படி உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது என்றும் ஐந்து ரிட் மனுக்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக ஒரு வாரத்தில் ஒன்றிய அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வக்ஃபு திருத்த சட்ட மசோதா வழக்கில் உத்தரவு பிறபித்த உச்ச நீதிமன்றத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 ஐ எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்ததற்கும், வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கவும், வக்ஃப் வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பதைத் தடுக்கவும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தீங்கிழைக்கும் திருத்தச் சட்டம் மத்திய அரசால் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, அவர்களின் தொண்டு நிறுவனங்கள் மற்றும் முக்கிய மத நடைமுறைகளின் நிர்வாகத்தில் தலையிடுவதன் மூலம் இயற்றப்பட்டது என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்..! முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ் மரியாதை..!
நாங்கள் முன்னிலைப்படுத்தியபடி, சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறுஆய்வு குறைத்ததில் மகிழ்ச்சி என்றும் சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க தவறமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு இரு மடங்கு நிதி..! சட்ட முன்வடிவை முன்மொழிந்தார் முதலமைச்சர்..!