×
 

எலி ஸ்பிரே அடித்து விளையாடிய குழந்தைகள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

புதுக்கோட்டை அருகே எலிக்கொல்லி ஸ்பிரே அடித்து விளையாடிய குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மன்னவேலம்பட்டி கிராமத்தில் நான்கு குழந்தைகள் ஒரே இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குழந்தையின் கையில் எலிகளை கொள்ள பயன்படுத்தும் எலிக்குள் இஸ்பிரே இருந்துள்ளது. இதனால் விபரீதம் ஏற்படும் என்பதை அறியாத குழந்தைகள் அந்த ஸ்பிரேவை மாறி மாறி முகத்தில் அடித்து விளையாடியுள்ளனர்.

இதனை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக குழந்தைகளை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். முன்னதாக நான்கு குழந்தைகளுக்கும் ஒரு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து எலி கொல்லி ஸ்பிரே அடித்து விளையாடியதன் மூலம் வயிற்று வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கழிவுகளால் கலங்கும் பவானி.... சட்டவிரோத சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..

குழந்தை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக மருத்துவம் பார்க்கப்பட்ட நிலையில் குழந்தைகளின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என மருத்துவ குழுவினர் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆபத்தான எலி கொல்லி ஸ்பிரே குழந்தைகளின் கையில் எப்படி வந்தது என்ற கேள்வியும் முன்னதாக எலி பேஸ்டுக்கே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்பிரே எப்படி குழந்தைகளின் கையில் கிடைத்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலி உள்பட 6 பேரை கொலை செய்த கொடூரன்; திருமணம் செய்து வைக்க மறுத்ததால் நடந்த வெறிச் செயலா? உருக்கமான தகவல்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share