சித்திரையே வா முத்திரை பதிக்க.. சுசீந்திரம் கோயிலில் காய்கனிகள் அலங்காரத்துடன் சிறப்பு வரவேற்பு..!
சித்திரை திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோயிலில் காய்கனிகளை கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை ஒன்றாம் நாள் விளங்கி வருகிறது. இதனை தமிழ் புத்தாண்டு என்றும் சித்திரை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உள்ளது அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானதாக கருதப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன அமர்களது தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை மாதம் முதலாவது மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில் சூரியன் அதன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாளையும், சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாளையும் தான் சித்திரை மாதம் என கொண்டாடுகிறோம்.
இந்த நிலையில், சித்திரை திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோயிலில் காய்கனிகளை கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. திருவிதாங்கூர் மன்னர்கள் கால வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்களில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோயிலிலும் ஒன்று.
இதையும் படிங்க: இது என்.டி.ஏ கூட்டணி இல்ல!!எடப்பாடி கூட்டணி..! அல்லு கிளப்பும் அதிமுக ஆதரவாளர்கள்
அத்திரி முனிவரும், அவருடைய மனைவியும் கற்புக்கரசி அனுசுயாதேவியும் சுசீந்திரத்தில் தவம் செய்யும் தல வரலாற்றை கொண்டுள்ள இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்களும் வந்து செல் கின்றனர்.
இந்த நிலையில் இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு காய் கனிகள் மூலம் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பல்வேறு வகையிலான காய்கனிகள் சுவாமிக்கு முன் படைக்கப்பட்ட பின்னர் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அதிகாலை முதலேயே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 5 ஆண்டுகள் தாலி கட்டிக்கொண்ட திமுக... அதிமுகவுக்கு 2 மாத அட்ஜெஸ்ட்மெண்ட்தான்: பழ.கருப்பையா பொளேர்..!