விஜய் கட்சியின் பிரச்சார கர்த்தாவாக மாறிய கிறிஸ்தவ கல்லூரி: சர்ச்சையோடு நுழைந்த ஆதவ்..!
ஆதவ் அர்ஜுனா மேடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது தவெக பாடலை ஒலி பரப்பி அவரை வரவேற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தனியார் கல்லூரி விழாவில் தவெக-வின் பாடலை ஒலிபரப்பி ஆதவ் அர்ஜுனாவை வரவேற்று நடிகர் விஜய்க்கு ஆதரவு அலையை கிளப்பிய கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி 132 வது ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற விழாவில் தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் கல்லூரி அரங்கத்தில் நுழையும் போது மாணவர்கள் சிலர் தவெக கொடியை ஏந்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அங்கு மாணவர்களிடையே நடிகர் விஜய்யின் கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டிய அதே தருணத்தில் அதற்கு ஒரு படி மேலே போய் கல்லூரி நிர்வாகம், நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்பதை வெளிக்காட்டும் விதமாக செயல்பட்டது.
இதையும் படிங்க: விஜய்-க்கு வந்த புதிய சிக்கல்... மீண்டும் தன் வேலையை காட்டும் எஸ்.ஏ.சி!!
ஆதவ் அர்ஜுனா மேடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது தவெக பாடலை ஒலி பரப்பி அவரை வரவேற்றது. கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க செய்து அவரது கட்சி பாடலை ஒலிபரப்பி சர்ச்சையை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகத்தை நோக்கி அரசியல் விமர்சகர்களின் பார்வை திரும்பியுள்ளது.
தவெக ஆதவ் அர்ஜூனா, பாஜக அண்ணாமலை மீது விமர்சனம் வைத்த நிலையில் லாட்டரி மார்ட்டின் மகன் சார்லஸ், தன் அப்பா பணத்தை தவறான வழியில் பயன்படுத்தி அவப்பெயர் உருவாக்குவதாக ஆதவ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்த சர்ச்சையால் ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் வரிசையில் இப்போ ஆதவ் அர்ஜுனாவும் சர்ச்சைக்கு சலங்கை கட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: வட இந்தியர்கள் யாசகம் எடுக்கிறார்கள்.. தமிழர்கள் யாசகம் இடுகிறார்கள்.. சொல்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்!!