×
 

நடுராத்திரியில் நாங்க ஏன் சுடுகாட்டுக்கு போகணும்?- முதல்வர் ஸ்டாலின்

நாகையில் 35 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நாகையில் ரூ.139.92 கோடி மதிப்பீட்டிலான 35 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தொகுதி மறுசீரமைப்பு திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று கூறியவர்கள் தயவுசெய்து வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதை அரசியலாக பார்க்க வேண்டாம் என்றும் இது நம்முடைய உரிமை எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: 72-வது பிறந்தநாள்; குடும்பத்துடன் கேக் வெட்டி எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...! 

இவன் என்ன அழைப்பது ? நாம் என்ன போவது ? என்று கவுரவம் பார்க்க வேண்டாம் என்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு வரும் ஐந்தாம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் 40 கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொகுதி சீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், மும்மொழி கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அளிக்க வேண்டியது தானே என சில அதிமேதாவிகள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.. ரூபாய் நோட்டில் மொழி சமத்துவம் இருக்கும்போது நாங்கள் ஏன் நடு ராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

 

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 15லிருந்து 20 ஆக உயர்வு.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share