×
 

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை 4 பேரையும் தேடி வருகிறது. 

இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முகமது சுதீனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு! 

இதனிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தின் பொறுப்பு எஸ்.பி.யான மதுரை எஸ்.பி. அரவிந்தன் நேரில் ஆய்வு நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்தவர்களிடமும், காவல்துறையினரிடமும் விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்த அவர், மீட்பு பணிகளையும் பார்வையிட்டார். 

சாத்தூர் அருகேயுள்ள அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் பையர் வொர்க்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், மூலப்பொருட்களை கலக்கும் போது பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமானதோடு, 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த முகமது சுதீன் என்பவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: #BREAKING சாத்தூர் அருகே பயங்கர  வெடி விபத்து - 6 பேர் பலி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share