×
 

இது கொத்தடிமை கூடாரம்..! அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் டைரக்ட் அட்டாக்..!

அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக அதிமுக கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 2 ரெய்டுகளுக்குப் பயந்து அவர்கள் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டதாகவும் அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு தொடர் தோல்வியைக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள் என்றும் அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனை..! உடனடி தீர்வு காண ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!

தோல்வி கூட்டணியை மீண்டும் அமித்ஷா உருவாக்கி இருப்பதாகவும், தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை என்றும் குற்றம்சாட்டினார்.பழைய கொத்தடிமைக் கூடாரமான அ.தி.மு.க. தலைமையை மிரட்டிப் பணிய வைத்துசதித்திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது என்றும் பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் எனவும் கூறினார் 

மேலும், சுயமரியாதையின்றி டெல்லியில் மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு மக்கள் தக்க விடையளிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார். ஊழலுக்காக இரண்டு முறை பதவி இழந்து, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஜெயலலிதா எனவும், கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது ஊழல் என்பது பற்றி பேச தகுதியான வார்த்தைகள் எனவும் கேள்வியை முன் வைத்தார்.

இதையும் படிங்க: சீக்கிரமே ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கதி தான்.. அடித்து கூறும் பாஜக தலைவர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share