திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்எச்பி பெட்டிகள் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இரண்டு ரயில்கள் புதிய எல்எச்பி பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவையில் இருந்து திருப்பதி செல்வதற்கு ஏதுவாக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பயணிகள் அதிகரித்துள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பயணத்தை முன்னிறுத்தி பெட்டிகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற 2ஆம் தேதி முதல் கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகின்ற புதிய எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பெட்டியில் 1 ஏசி சேர் கார், 9 இரண்டாம் வகுப்பு சேர் கார்கள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு லக்கேஜ் கம் பிரேக் வேன் என திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் திருப்பதியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் வருகின்ற இரு மார்ச் 20 ஆம் தேதி முதல் இந்த புதிய எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை மீது டாஸ்மாக் நிறுவனம் வழக்கு.. தொடர் விசாரணை நடத்த தடைகோரி மனு..!
இதையும் படிங்க: கிரையோஜனிக் என்ஜின் சோதனை வெற்றி.. மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்..!