×
 

டாஸ்மாக் ஊழல் விவகாரம்.. யாரும் பதிலளிக்காததால் முறைகேடு நிரூபணம்.. எடப்பாடி அட்டாக்!!

அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், விற்பனை மையங்களில் சோதனைகள் நடைபெற்றன. மொத்தமாக 7 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே நடைபெற்ற சோதனைகளில் ஏராளமான ஆவணங்களும், பெருமளவு ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சோதனையில் ரூ.1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: அய்யோ அம்மா... அமலாக்கத்துறை..! கே.என்.நேருவின் சகோதரார் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டசபை சபாநாயகர் இன்று நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை. ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும். ஆக்கப்பூர்வமாக கருத்துகளை கூறுவதற்கு நேரம் கொடுக்க மறுக்கிறார்கள். மக்கள் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம். முறையாகத்தான் அனுமதி கேட்டேன். தவறாக இருந்தால் நீக்கி விடுங்கள் என்று கூறினேன். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் கூறவில்லை. யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது. மதுபாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக விற்பதால் ரூ.5,400 கோடி கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெகஜ்ஜால கில்லாடிகள்... கே.என்.நேருவின் சகோதரரும் மகனும் இப்படித்தான் மோசடி செய்தார்களா..? ED-யிடம் சிக்கிய ஆதாரங்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share