×
 

தலித், ஓபிசிகளின் நம்பிக்கையைப் பெற காங்கிரஸ் தவறிவிட்டது: ராகுல் காந்தி ஓபன்டாக்

கடந்த 1990-களில் தலித் மக்கள், ஓபிசி பிரிவினரின் நம்பிக்கையைப் பெற காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் தலித் இன்ஃப்ளூயன்சர்ஸ் சார்பில் “வஞ்சித் சமாஜ்: தசா அவரு திசா” என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த 1990களில் தலித் மக்களின் நலன்களையும், ஓபிசி பிரிவினரின் நலன்களையும் காங்கிரஸ் கட்சி காப்பதற்கு தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்த தயக்கமும் இல்லை. 1990களுக்கு முன் இந்திரா காந்தி பிரதமராக இருந்த நேரத்தில், ஆதிவாசிகள், தலித் மக்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவரும் காங்கிரஸ் கட்சி மீது முழு நம்பிக்கையுடன் இருந்தனர்.
கடந்த 1990களில் காங்கிரஸ் கட்சி ஒருவேளை தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தால், காப்பாற்றி இருந்தால், நிச்சயமாக ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அதிகாரத்தை கைப்பற்றியிருக்க முடியாது.


தலித் மக்களின் ஆதரவை காங்கிரஸ் கட்சி இழந்ததற்கு யாரையும் குறிப்பிட்டு குறைகூறமாட்டேன், யார் பெயரையும் தெரிவிக்கமாட்டேன். ஆனால், உண்மை என்னவென்றால், குறைபாடுகளையும், குற்றங்களையும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது.


காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர்கள், ஆதரவு திரும்ப வந்தால் கிடைத்தால், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஓடிவிடும். தலித் மக்கள், ஓபிசி பிரிவினரின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முதல் படி, இந்தப் பிரிவுகளுக்கு கட்சியில் பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம் ஒரு உள் புரட்சியை கொண்டுவர வேண்டும். தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் அளிப்பதால் அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது, அதேசமயம், அரசு நிறுவனங்களிலும் அவர்களுக்கான பிரதிநித்துவம் கிடைக்க வேண்டும்.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி டமால்..? இரு கட்சித் தலைவர்களிடையே அதிகரிக்கும் புகைச்சல்!


அதிகாரப் பகிர்ந்தளிப்பு மற்றும் பிரதிநித்துவம் ஆகியவற்றுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. பிரதிநிதித்துவத்தைப் பற்றி நாங்கள் பேசவில்லை. கன்சிராம் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக போராடினார் ஆனால், பாஜகவினர் அரசியல் பிரதிநிதித்துவத்தை பொருத்தமற்றதாக மாற்றிவிட்டனர். அரசின் நிறுவனங்கள், அது கல்வி நிறுவனமாக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் இந்தியாவாக இருந்தாலும் சரி, நீதித்துறை என எதுவாக இருந்தாலும் தலித், ஓபிசிகளக்கு அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும்.


பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ளனர். ஆனால், அதிகாரப்பகிர்வு வெறும் 5 சதவீதம்தான். தலித் மக்கள் மக்கள்தொகையில் 15% இருக்கிறார்கள், அதிகாரப்பகிர்வு வெறும் ஒரு சதவீதம்தான். 
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: செல்வப் பெருந்தகைக்கு செக் வைக்கும் திமுக தலைமை...டி.கே.சிவகுமார் மூலம் ராகுலுடன் பேச்சு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share