காங்கிரஸ் நிர்வாகி மர்ம மரணம்.. அழுகிய நிலையில் சடலம்.. விசாரணையில் இறங்கிய போலீஸ்..!
நீலகிரியில் காங்கிரஸ் நிர்வாகியின் உடல் அழுகிய நிலையில் கண்ணெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். முன்னாள் ராணுவ வீரரான இவர், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டை திறந்து பார்த்தபோது உள்ளே ராஜ்குமார் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
இதையும் படிங்க: மாபெரும் வன்முறை..! இந்துக்கள் தாக்கப்பட்டால் இனிக்கிறதா..? வெட்கக்கேடான ராகுலின் மௌனம்..!
தொடந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜ்குமார் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கக்கூடும் என்றும், கொலையா, தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக, ஆதரவாக மனுதாக்கல்.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!