இலவசத்திற்கு பில் போட்ட கடை உரிமையாளர்.. நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..
இலவசமாக வழங்கிய கேரி பேக் இருக்கும் சேர்த்து பணம் வசூலித்த ஜவுளி கடை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 15,000 இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல ஜவுளி கடை ஒன்றில் 8000-க்கும் மேற்பட்ட தொகையில் ஆடைகள் வாங்கியுள்ளார். அதை எடுத்துச் செல்ல ஸ்ரீதருக்கு இரண்டு பேப்பர் கேரி பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அப்போது இலவசமாக கொடுக்கப்பட்ட அந்த இரு கேரி பேக்களுக்கும் பில் கவுண்டரில் 16 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஸ்ரீதர் கடை உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினரிடம் உரையாடவே இந்த பிரச்சனை தலை தூக்கியது.
இதுகுறித்து ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட ஜவுளி கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.. ஆனால் அதற்கு அந்நிறுவனம் பதில் அளிக்காததால், தொடர்ந்து சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அதிமுக, தவெக கட்சி தலைவர்களை நேரடியாக சந்திக்கும் பாஜக' - அனல் கிளப்பும் அண்ணாமலை..!
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி நீதித்துறை தலைவர் கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள், இலவசம் எனக் கூறி பணத்தை வசூல் செய்தது முறையற்ற வணிகம் என்றும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக பத்தாயிரம் ரூபாய் இழப்பீடாகவும் வழக்கு செலவாக ஐந்தாயிரம் ரூபாய் என மொத்தம் 15 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதத்திற்குள் ஸ்ரீதருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இழப்பீட்டை இரண்டு மாதங்களுக்குள் வழங்க தவறினால் அந்த தொகையை செலுத்தும் வரை ஆண்டுக்கு 9 சதவிகிதம் வட்டியுடன் இழப்பீடாக வழங்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். முன்னதாக கேரி பேக் இலவசம் அல்லது அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு தெரியும் வகையில் பதாகைகளை வைக்க அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: பராமரிப்பு பணியின் காரணமாக மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் 16 ரயில்கள் ரத்து..