×
 

3 கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்.. கடுப்பான போலீசார் தீவிர விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் செல்போன் கடை துணிக்கடைகள் என அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டில் செல்போன் கடை, துணிக்கடை என அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக, பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், செங்கல்பட்டு பெரிய செட்டி தெருவில் தினேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று (ஏப்ரல் 7) இரவு 10 மணளவில் கடையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 8) காலை தினேஷ் கடை அருகே வசித்து வந்த நபர், அவரை தொடர்பு கொண்டு கடையின் ஷட்டர் திறந்து இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தினேஷ் கடைக்குள் சென்று பார்த்தார்.

இதில், கடையின், இரும்பு ஷட்டரின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, கடையின் உள்ளே இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், உதிரி பாகங்கள் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்துள்ளது.இதுகுறித்து தினேஷ் அக்கம்பக்கத்தினரிடன் விசாரணை செய்ததில் அடுத்தடுத்து இரண்டு துணிக்கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது தெரிய வந்துள்ளது. இரண்டு துணிகடைகளில் ரூ.55 ஆயிரம் ரொக்கமும், துணியும் திருடுபோயுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியை வீட்டில் கொள்ளை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்த போலீசார், கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சிசிடிவி வீடியோவில், ஹெல்மெட் அணிந்திருக்கும் மூன்று இளைஞர்கள் கடப்பாரை மூலமாக பூட்டுக்களை உடைத்துள்ளனர். தொடர்ந்து கடைக்குள் சென்றவர்கள் கையுறை அணிந்தபடி கடைக்குள் இருந்த செல்போன்கள், உதிரி பாகங்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்றது பதிவாகியுள்ளது. தற்போது செங்கல்பட்டு நகர போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING: குஜராத்தில் திடீரென மயங்கி சரிந்து விழுந்த ப.சிதம்பரம்: பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share