கொரோனா நோயாளியை வன்கொடுமை செய்த சம்பவம்..! ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை..!
கேரளாவில் கொரோனா நோயாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலில் சீனாவின் வூகானில் 2019 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 கொரோனா தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவும், ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனா அலை வீசி மக்களை கொன்று குவித்தது.
கோவிட் பெருந்தொற்று காலமான 2020 இல் செப்டம்பர் 5 ஆம் தேதி கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் அடூர் பொது மருத்துவமனையில் இருந்து பந்தளத்தில் உள்ள மருத்துவமனை கோவிட் சிறப்பு வார்டுக்கு கொரோனா பாதித்த 19 வயது பெண் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்... அதிரடியாக அறிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி.!!
அவருடன் மற்றொரு நோயாளியும் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பாதி வழியில் இறக்கிவிட்டுவிட்டு, பந்தளம் செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத பகுதியில் நிறுத்தி 19 வயது பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணை பந்தளம் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் தப்பியோடினார்.
பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நிகழ்ந்ததை மருத்துவமனை ஊழியர்களிடமும் பெற்றோரிடமும் கூறியதைத்தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அடுத்த நாளே அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நௌபல் கைது செய்யப்பட்டார்.கடந்த 5 வருடங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்ததுடன், அவர் குற்றவாளி என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனம் குளிரும் பினராயி விஜயன்!