×
 

முதல்வன் பட பாணியில் கொள்ளை.. வசமாக சிக்கிய ரேஷன் ஊழியர்.. சுத்துப்போட்ட மக்கள்..!

காஞ்சிபுரம் அருகே நியாய விலைக் கடையில் 1 கிலோவுக்கு 50 கிராம் வீதம் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேரை வட்டாட்சியர் பரிந்துரை பேரில் கூட்டுறவு துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் கூட்டுறவுத் துறை வழங்கி வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் அரிசி பொருட்களில் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கையும் கூட்டுறவுத் துறை வட்ட வழங்கல் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி MVMP நகர் பகுதியில் இயங்கி வரும் முன்மாதிரி நியாய விலை கடையில் சுமார் 547 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களைப் பெற்ற வருகின்றனர். இந்த கூட்டுறவு கடையில் விற்பனையாளராக அருள்மணி என்பவரும், எடையாளராக தற்காலிக பணியில் அன்பழகன் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நியாய விலைக்கடையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. டிஜிட்டர் மீட்டரில் தில்லாலங்கடி செய்து, ஒரு கிலோவுக்கு 50 முதல் 60 கிராம் குறைவாக கிடைக்கும் படி செய்து மக்களுக்கு பொருட்களை வழங்கி உள்ளனர். அதாவது 10 கிலோ அரிசி வழங்கும்போது ஒவ்வொரு அட்டைதாரருக்கும் சுமார் 430 கிராம் முதல் 500 கிராம் வரை எடை குறைவாக அரிசி வழங்கி உள்ளனர். இதுபோன்று 13 அட்டைதாரர்களுக்கும் இதே நிலையில் அரிசி வழங்கி உள்ளனர். அதில் ஒருவர் எடைகுறைவாக இருப்பதாக சந்தேகப்பட்டு, அருகில் உள்ள கடையில் எடை போடும் போது தான் குட்டு வெளிப்பட்டது. 

இதையும் படிங்க: இன்னும் 3 நாளில் திருமணம்.. காதலி மரணம்.. காதலன் தலைமறைவு.. என்ன நடந்தது..?

இந்த நிலையில் ரேஷன் அட்டைக்காரர்கள் அனைவரும் இதுகுறித்து கேட்டபோது ஊழியர்கள் முறையற்ற பதில் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கடை முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் இடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் பேரில் அங்கு வந்த மாமன்ற உறுப்பினர் கார்த்திக் இது குறித்து கேட்டடுள்ளார். அப்போது ரேஷன் கடை ஊழியர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளனர்.  அப்போது பொதுமக்கள் பெற்ற பொருட்களின் எடையை சோதித்த போது பொதுமக்களின் புகார் உண்மை தன்மை தெரிய வந்தது. 

உடனடியாக இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் காஞ்சிபுரம் வட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பொதுமக்களின் புகாரின் பேரில் விசாரணை நடத்தியதினார். அதில் விற்பனையாளர் அருள்மணி முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் திடீரென உடல்நிலை குறைவு எனக் கூறி மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு வட்ட வழங்கல் அலுவலர் புகார் தெரிவித்ததின் பேரில், துணைப் பதிவாளர் பொதுமக்களின் புகாரின் உறுதி தன்மை, விசாரணை அடிப்படையில் விற்பனையாளர் அருள்மணியை தற்காலிக பணிநீக்கம் செய்தும், எடையாளராக பணிபுரிந்த அன்பு மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தும் உத்தரவிட்டார். உடனடியாக இந்தக் கடைக்கு காயத்ரி என்ற விற்பனையாளரை தற்காலிக பணியின் நியமனம் செய்தும் பொருட்கள் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினார்.  

பொதுமக்களின் புகாரை விடுமுறை நாள் என்றும் பாராமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டு அதன் பேரில் நடவடிக்கை எடுத்ததை அனைத்து பொதுமக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்..

இதையும் படிங்க: அடுத்த இடி.. திருச்சி, கோவையிலும் இறங்கிய ED... ஆடிப்போன கே.என்.நேரு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share