கன்னி பெண்ணுடன் உறவு வைத்தால் ஆயுள் கூடும்? ஜோசியத்தை நம்பி சிறுமியை சீரழித்த தம்பதி.. 20 வருஷம் ஜெயில்..!
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு அருகே கன்னிப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என ஜோசியர் கூறியதை நம்பி சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தம்பதிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் பல்வேறு மூட நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. முக்கியமாக ஜாதகம், ஜோசியம் போன்றவையை பயன்படுத்தி பலர் ஏழை மக்களின் பணத்தை பறிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல்வேறு சிக்கல்களில் மாட்டி விடுகின்றனர். சிலர் புதையல் எடுப்பதற்கு பலி கொடுக்க வேண்டும் என பிஞ்சு குழந்தைகளை கொல்லும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு அருகே கன்னி சிறுமியுடன் கணவர் உடலுறவு கொண்டால் அவரது ஆயுள் அதிகரிக்கும் என போலி ஜோசியர் கூறியதை நம்பி, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தம்பதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கொடுமையான சம்பவம் அரங்கேறியது. திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு அருகே ரைஸ்மில் தெரு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அழகுராஜா. அவருக்கு 32 வயதாகிறது. இந்நிலையில் அழகுராஜவுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போனதால் 25 வயதான அவரது மனைவி ராமலட்சுமி ஜோசியரை பார்த்து அதற்கு என்ன பரிகாரம் என கேட்டுள்ளார். அந்த போலி ஜோசியரோ, கன்னி கழியாத சிறுமியுடன் உனது கணவர் உல்லாசமாக இருந்தால் அவரது ஆயுள் கூடும் என்று அடித்துவிட்டுள்ளார். ஜோசியரின் பேச்சை வேத வாக்காக எடுத்துக்கொண்ட ராமலட்சுமியும், சிறுமி யாராவது கிடைப்பார்களா? என்று அப்பகுதி முழுவதும் வலைவீசி தேடி உள்ளார்.
இதையும் படிங்க: 7 மாணவிகளிடம் அத்துமீறிய 58 வயது தலைமை ஆசிரியர்.. மாணவிகளின் வாக்குமூலத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
தன்னுடைய டூவிலரில் ராஜலட்சுமி வலைவீசி தேடிய போது அப்பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். சிறுமி அருகில் சென்ற ராஜலட்சுமி நைசாக பேச்சுக்கொடுத்து சிறுமியை தனது வண்டியில் ஏற்றி தனது வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு சிறுமியையும், தனது கணவரையும் ஒரே அறையில் அடைத்துவிட்டு வெளியில் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வாசலில் காவலுக்கு அமர்ந்துள்ளார். வீட்டின் உள்ள அவரது கணவன் அழகுராஜா, 14 வயது சிறுமி என்றும் பாராமல், வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து சிறுமியை சிதைத்துள்ளான்.
ஒருநாள் முழுவதும் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து தம்பதி கொடுமை படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே சிறுமியின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என போலீசில் புகாரளித்துள்ளனர். அதற்குள் ராஜலட்சுமி சிறுமியை தனது டூவிலரில் கொண்டு வந்து மீண்டும் சிறுமியின் வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு தப்பி ஓடினார். மகளின் நிலை கண்டு பதறிப்போன பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். சிறுமி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து அழுதபடி தெரிவிக்கவே பெற்றோரும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அழகுராஜா, ராஜலட்சுமி தம்பதியை கைது செய்த போலீசார் சிறையில் அடைந்த்தனர்.
இந்த வழக்கு 2021 டிசம்பர் 16ல் போக்சோ பிரிவில் சேர்க்கப்பட்டது. தேனி போக்சோ சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார். இறுதியில், அழகுராஜா, ராமலட்சுமி தம்பதிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: 7 பேரால் சிதைக்கப்பட்ட சிறுமி! மாணவர்கள் போர்வையில் காம அரக்கன்கள்! கோவையில் கல்லூரி மாணவர்கள் கைது!