×
 

‘பசுவின் கோமியம்’ ஜீரணத்தை தூண்டும், மருத்துவ சக்தி கொண்டது: சென்னை ஐஐடி இயக்குநர் புதிய கண்டுபிடிப்பு

பசுவியின் கோமியத்தில் மருத்துவ சக்தி இருக்கிறது, வயிறு தொடர்பான நோய்களை குணப்படுத்தும், ஜீரண சக்தியை மேம்படுத்தும் என்று சென்னை ஐஐடி கல்வி நிறுவன இயக்குநர் வி. காமகோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நாட்டின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடி கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஒருவரே எத்தகைய ஆய்வும் இன்றி பசுவின் கோமியத்தில் மருத்துவ சக்தி இருக்கிறது என்று பேசியுள்ளது சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.


மாட்டுப் பொங்கல் தினத்தன்று, “ பசு சம்ரக்சனா சலா” என்ற நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி  பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மைக்கு நாட்டுப் பசுக்கள் எவ்வாறு துணை செய்கின்றன, பொருளாதாரத்திலும் அதன் பங்கு என்ன என்பது குறித்துப் பேசினார்.


அப்போது அவர் பசுவின் கோமியத்தின் சக்தி குறித்தும், துறவிகளின் வாழ்க்கை குறித்தும் பேசுகையில் “ துறவியாக மாறிய ஒருவர் பெரும்பாலும் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களிடம் செல்லாமல் சுயமருத்துவம் எடுப்பார்கள். குறிப்பாக அதிக காய்ச்சல் இருக்கும்போது, பசுவின் கோமியத்தை குடிப்பார்கள். அந்த துறிவியின் பெயரை மறந்துவிட்டேன், ஆனால், அவர் பசுவின் கோமியம் மருந்து என்று குறிப்பிட்டார். காய்ச்சல் வந்த 15 நிமிடங்களில் பசுவின் கோமியத்தை குடித்தால் காய்ச்சல் நின்றுவிடும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பசு பாதுகாப்பு செலவு ரூ.2 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக அதிகரிப்பு: ஹரியானா பாஜக அரசு முடிவு


பசுவின் கோமியம் என்பது பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி கொண்டது, பூஞ்சையை எதிர்க்கக்கூடியது, உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது, வயிறு தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தும் மருத்துவ சக்தி கொண்டது” எனத் தெரிவித்தார்.


ஐஐடி இயக்குநர் காமகோடியின் பேச்சுக்கு, திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் “ நாட்டின் கல்வித்தரத்தை, கல்வியை தாழ்த்தும்வகையில், வீணடிக்கும் நோக்கில் மத்திய அரசு இறங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.
காங்கிஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வைத்துள்ள விமர்சன்தில் “ஐஐடி இயக்குநர், போலி அறிவியலைப் பரப்புவது இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்புக்கு பொருத்தமற்றது” என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share