×
 

விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து.. சுக்கு நூறான ஆலை.. தொடரும் துயரம்..!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த 6க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் ஆர் ஆர் நகர் அருகே உள்ள சின்ன வாடியூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் நாக்பூர் பேசோ என்ற உரிமம் பெற்று பட்டாசு ஆலை ஒன்றை இயக்கி வந்துள்ளார். இந்த ஆலையில் அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென ஆலை வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்தக் கோர விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் காயமடைந்தோரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது என்றும் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெடி விபத்திற்கான முழு காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..? மிரட்டி உருட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் வேண்டாம்...' அண்ணாமலை பகீரங்க எச்சரிக்கை..!

முன்னதாக பட்டாசு ஆலையின் போர் மேன் செல்வகுமார் பட்டாசாலையின் உரிமையாளர் மோகன்ராஜ் ஆகியோர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆலையின் உரிமத்தை  தற்காலிகமாக ரத்து செய்வதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஜேசிபி மூலம் மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில், மதுரை எஸ்.பி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக இரு பெண்கள் காணவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத வகையில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மாணவியை நாசமாக்கிய பள்ளி ஆசிரியர்கள்... திமுக அரசை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share