×
 

நெற்பயிர்களை அழித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. மனித உரிமை ஆணையம் பரிந்துரை..!

விவசாய பயிர்களை அழித்த காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள வடமாம்பாக்கம் கிராமத்தில், கனகவள்ளி என்பவருக்கும், விஸ்வநாதன் என்பவருக்கும் இடையே  நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2021 ம் வாக்குவாதம் முற்றி இருதரப்பும் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அப்போது புகார் மனுவை பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில், கனகவள்ளியின் தோட்டத்திற்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர், விசாரணை எதுவும் நடத்தாமல், கனவள்ளியையும் அவரின் கணவரையும் கடுமையாக தாக்கியதோடு, அவர்களின் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்களையும் டிராக்டர் வைத்து காவல் உதவி ஆய்வாளர் அழித்தார்.

இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை..! 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு..!

இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் முத்துகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட கனகவள்ளி புகார் மனு அனுப்பியிருந்தார். இந்த மனுவை விசாரித்த  மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பாதிக்கப்பட்ட கனகவள்ளிக்கு 4 வாரத்தில் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, உதவி ஆய்வாளர் முத்துகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க: 3 மாதம் தான் கெடு... அதுக்குள்ள முடிக்கல, அவ்வளவுதான்.. அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share