×
 

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு...நடிகைகளிடம் விசாரணை? - வதந்தி பரப்பினால் நடவடிக்கை தமன்னா... புதுச்சேரி போலீஸ் ஆலோசனை

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கைதான குற்றவாளிகளின் சொத்து விவரங்களை சேகரிக்கும் சைபர் கிரைம் போலீசார், நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரிக்க உள்ளனர். தன்னைப்பற்றி வீண் வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என தமன்னா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (70). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரியான இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி அசோகன், பல்வேறு தவணைகளில் ₹98 லட்சத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தார். பின்னர் அவருக்காக தொடங்கப்பட்ட கணக்கில் ₹9 கோடி லாபம் கிடைத்துள்ளதாக காண்பிக்கப்பட்ட நிலையில் அதை எடுக்க முயன்றபோது அசோகனுக்குதான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

 இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அசோகன் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து, மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த நித்திஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஜியோ காய்ன் இந்தியாவின் புதிய கிரிப்டோகரன்சியா..? படபடக்கும் மக்கள்… பளபளக்கும் உண்மை..!

பின்னர் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா உத்தரவின்பேரில் எஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையில் சைபர் கிரைம் போலீசார், கைதான 2 பேரிடமும் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், கிரிப்டோ கரன்சி மோசடியில் கோவையைச் சேர்ந்த தாமோதரன், நூர் முகமது, சந்தானம், இம்ரான் பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா உள்பட 10 பேருக்கும் தொடர்பு இருப்பதும், பிரபல தமிழ் நடிகைகளுக்கு இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு இருந்ததும் தெரிய வந்து உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட கும்பல் கடந்த 2022ல் கோவையில் ‘ஆஷ் பே’ எனும் பெயரில் நிறுவனம் தொடங்கினர். இதன் தொடக்க விழாவில் பிரபல தமிழ் நடிகைகள் பங்கேற்று உள்ளனர். தொடர்ந்து, 3 மாதங்களுக்குபின் மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியில் நடந்த விழாவில் பிரபல நடிகை மூலம் தங்களிடம் முதலீடு செய்த 100 பேருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கி அதிக முதலீட்டாளர்களை கவர்ந்து உள்ளனர். இக்கும்பல் புதுச்சோியைச் சேர்ந்த 9 பேரிடம் ₹3.60 கோடி மோசடி செய்துள்ளதோடு, டெல்லி, ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ₹60 கோடிக்குமேல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஷ் பே நிறுவனத்துக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இக்கும்பல் புதுச்சேரியைச் சேர்ந்த 9 பேரிடம் ₹3.60 கோடி மோசடி செய்துள்ளதோடு, டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ₹50 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்டு டிஸ்க், வங்கி கணக்கு குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி குறித்து சைபர்கிரைம் போலீசார் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 10 பேரை தனிப்படை தேடி வருகின்றனர். 

மேலும் இந்த மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்தி உள்ளனர். அதனால் மோசடிக்கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே 2 நடிகைகளிடமும் விசாரணை நடத்த அவர்களுக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என சைபர் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வங்கியில் உள்ள பணம், மோசடியில் சம்பாதித்து பணம் எவ்வளவு, அதில் எவ்வளவு சொத்துக்கள் வாங்கப்பட்டது என்பது குறித்தும், அவர்களது உறவினர்களின் வங்கிக்கணக்குகளில் மோசடியால் திரட்டப்பட்ட  பணம் அனுப்பட்டுள்ளதா என்றும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 

இதனிடையே தமன்னாவிடம் இது குறித்து ஆங்கில ஊடகம் கேட்டபோது, 

கிரிப்டோகரன்சி மோசடியில் நான் ஈடுபட்டதாகவும், அதில் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் வதந்திகள் பரப்பப்படுகிறது.  ஊடகங்களில் உள்ள எனது நண்பர்கள் இதுபோன்ற போலி, தவறான மற்றும் தவறான அறிக்கைகள் மற்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று  கூறினார்.

இந்த வதந்திகள் மற்றும் அறிக்கைகளுக்கு பதிலளித்த அவர், இந்த விஷயத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் வழியை தனது லீகல் குழு ஆராய்ந்து வருவதாகவும் கூறினார். "இதற்கிடையில், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க எனது குழுவும் இதைப் பரிசீலித்து வருகிறது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து... மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share