×
 

சி.வி.சண்முகத்திற்கு நாவடக்கம் தேவை.. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

சி.வி.சண்முகத்திற்கு நாவடக்கம் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்கட்சி என்ற முறையில் விமர்சனம் செய்ய உரிமை இருந்தாலும் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த விரிவான உத்தரவு தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: என்னது தேவநாதனின் சொத்துப்பட்டியல் இவ்வளவு பெருசா..!!

அந்த உத்தரவில், ஜனநாயகத்தில் ஆளும்கட்சி குறித்து விமர்சிக்க எதிர்கட்சிக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, பேச்சுரிமை, கருத்துரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்ததாத எந்த பேச்சையும் குற்ற வழக்கு மூலம் முடக்கக்கூடாது எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

சிவி சண்முகம் பயன்படுத்திய வார்த்தை வேண்டுமானால் ரசிக்க கூடிய வகையில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரது பேச்சை பொதுமக்கள் பார்வையில் இருந்து அணுக வேண்டுமெனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததே தவறு எனக் கூறிய நீதிபதி,
முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி. என்ற முறையில் முதலமைச்சர் விமர்சிக்கும் போது சிவி சண்முகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும், பேச்சுரிமை இருந்தாலும் கூட முதலமைச்சர் குறித்தோ, அரசு குறித்தோ பேசும் போது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசும் போது வெறுப்பு பேச்சை தவிர்க்க வேண்டுமெனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஞானசேகரன் மீது வேறு என்னென்ன வழக்குகள்..? விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share