×
 

“ஒரு கோடிப்பே..." 50 வயசில் மாமியாருக்கு அடித்த ஜாக்பாட்... ஆந்திராவையே மிரள வைத்த மருமகள்...!

ஆந்திராவில் மாமியாரின் 50 வது பிறந்தநாளுக்கு ஒரு கோடி மதிப்புள்ள வைர நகை உள்பட பரிசுகள் வழங்கிய மருமகள் சோசியல் மீடியாவை மிரள வைத்துள்ளார்.

வயசானாலே மருமகள் மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக பல செய்திகளை பார்த்திப்போம், கேட்டிருப்போம். ஆனால் எல்லா மருமகளுக்கும் முன்னூதாரணமாக ஆந்திராவில்  மாமியாரின் 50வது பிறந்தநாளுக்கு மருமகள் ஒரு கோடி  மதிப்புள்ள பரிசுகளை வழங்கி  மாமியார் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி உள்ளார். 

ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர்  கோனசீமா மாவட்டத்தில் உள்ள ராஜோலுவைச் சேர்ந்த, ராஜோலு வர்த்தக சபையின் தலைவரும் ஒருங்கிணைந்த  கிழக்கு கோதாவரி மாவட்ட ஆர்ய வைஷ்ய சங்கத்தின் செயலாளருமான காசு ஸ்ரீனிவாஸ் மற்றும் பவானியின் மகனான சுகேஷ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாயகியை திருமணம் செய்து கொண்டார்.

 திருமணம் ஆனது முதல்  ஸ்ரீரங்கநாயகியை மாமியார் பவானி பெற்ற மகள் போன்று பார்த்து கொண்டுள்ளார். இதனால் தனது மாமியார் பவானியின் 50வது பிறந்தநாளை மிகுந்த சிறப்புடன்  கொண்டாட முடிவு செய்தார். இதற்காக கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு ராஜோலுவில் உள்ள ஆர்ய வைஷ்ய கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான பவானியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதையும் படிங்க: கர்ப்பமா இருப்பாதாக பயம் காட்டிய கள்ளக்காதலி.. 2 லட்சம் கேட்டு மிரட்டல்.. வீடியோ காலில் விஷம் குடித்த டெய்லர் காதலன்..!

அப்போது ஸ்ரீரங்கநாயகி  தனது மாமியார் பவானிக்கு பட்டுச் சேலை, மஞ்சள் குங்குமம், வளையல்கள், தாலி, 100 கிராம் தங்க பிஸ்கட்கள், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ், 50 லட்சத்து  50 ஆயிரம் மதிப்புள்ள பணம் என மொத்தம் ஒரு கோடி மதிப்புள்ள பரிசுகளை வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தினார். 

பிறந்தநாள் விழாவை கலந்து கொண்டவர்களும், இந்த நிகழ்ச்சியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவான நிலையில் வைரலாக மாறி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் மருமகள் மாமியார் மீது வைத்துள்ள அன்பை கண்டு அனைவரும் பாராட்டி வாழ்த்தி  வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் மாமியாருக்கு மருமகளும் மருமகளுக்கு மாமியாரும் இதுபோன்று பரிசுகள் வழங்காவிட்டாலும் உரிய மரியாதை உடன்,  நன்னடத்தையோடு இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறி ஒற்றுமையாக வாழ வேண்டும் என இந்த நிகழ்வை  பலர் மறு பதிவு செய்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: ஜெலென்ஸ்கி ஆட்சியைக் கவிழ்க்க சதி..! உக்ரைனுக்கு ரகசியக் குழுவை அனுப்பிய டிரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share