×
 

அரவிந்த் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை.. பதிவு செய்தது டெல்லி போலீஸ்..!

அரவிந்த் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீஸ் பதிவு செய்தது.

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தை மீறியது, அரசின் பணத்தை தவறாகக் கையாண்டது தொடர்பாக டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

2019ம் ஆண்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவு பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டி மக்களின் பணத்தை தவறாகக் கையாண்டதாக அந்த முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கூடுதல் தலைமை மேஜிஸ்திரேட் நேகா மிட்டலிடம் டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

டெல்லி துவரகா பகுதியில் சட்டவிரோதமாக ஆம்ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், குலாப் சிங், உள்ளிட்டோர் தொடர்பாக பதாகைகளைகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாகவும், மக்களின் பணத்தை தவறாக செலிவட்டுள்ளது டெல்லி பொதுச் சட்டத்துக்கு விரோதமானது என டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழலா..? அமலாக்கத்துறை கண்டுபிடித்தது என்ன..?

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாஜிஸ்திரேட் பொதுச் சொத்து சட்டத்தை மீறியது, அரசின் பணத்தை தவறாகக் கையாண்டது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி கடந்த 11ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணை நடத்த போதுமான அவகாசம் தேவை, தற்போது விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸார் கேட்டுக்கொண்டதையடுத்து, விசாரணையை ஏப்ரல் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். சில பதாகைள், சுவரொட்டிகள் டெல்லி அரசு சார்பில் வைக்கப்பட்டவை, மற்றவை பண்டிகை காலங்களில் வாழ்த்துக் கூறியும், அரசியல் தலைவர்களை முன்நிறுத்தியும், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை வைத்தும் சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

2022ம் ஆண்டு துவாரகா தெற்கு காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், விசாரணையின் குறிப்பிடப்பட்ட இடங்களில் எந்த விளம்பரப் பதாகைகளும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துவாரகா நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் 2022 செப்டம்பர் 15ம் தேதி வழக்கைத் தள்ளுபடி செய்தார். ஆனால் சக்ஸேனா  இந்த மனுவை மறு ஆய்வு செய்யக்கோரியும், எப்ஐஆர் பதிவுசெய்யக் கோரியும் ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்திருந்தார். இதன்படி தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் 'டிகிரி சான்றிதழ்'.. டெல்லி ஐகோர்ட்டில் ஒப்படைக்க பல்கலை. சம்மதம்... தீர்ப்பு தள்ளிவைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share