அப்பா,அம்மாவை நடுத்தெருவுல விட்டா சொத்து அவுட்..! சூப்பர் அடி கொடுத்த கோர்ட்..!
தான பத்திரத்தை ரத்து செய்ய வயதான பெற்றோருக்கு முழு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தானப்பத்திரம் என்பது, ஒருவர் தனது சொத்தை தானமாக, அதாவது பரிசாக, வேறு ஒருவருக்கு வழங்குவதைக் குறிக்கும் ஒரு ஆவணம். இதற்காக எந்தவிதமான பணப் பரிவர்த்தனை அல்லது பிரதிபலனும் எதிர்பார்க்கப் படுவதில்லை. பெற்றோர் தானப்பத்திரம் என்பது, பெற்றோர் தங்களது சொத்துக்களை தங்களது பிள்ளைகளுக்கு அளிக்கும் ஒரு சட்டப்பூர்வமான ஆவணம் தான்.
வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் பிள்ளைகள் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் சொத்துகளை தானப் பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் பெற்றோரை சரிவர கவனித்துக் கொள்ளாமல் தவிக்க விடும் நிகழ்வும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சமயத்தில், அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால், அதற்காக அந்தப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா கடத்தியவர் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டும்.. போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயதான நாகலட்சுமி என்பவர் தனது பெயரில் உள்ள சொத்துக்களை தனது மகன் கேசவன் பெயருக்கு தான பத்திரமாக எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் தன் மகனும் மருமகளும் தன்னை முறையான கவனிக்கவில்லை என அவர் அளித்த புகாரின் பேரில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் தான பத்திரத்தை ரத்து செய்து நாகை வருவாய் போட்டாற்றிய கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதற்கிடையே கேசவன் இறந்து விட்ட நிலையில் வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து நாகலட்சுமி மருமகளும் கேசவனின் மனைவியுமான மாலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தான பத்திரத்தை ரத்து செய்வதில் எந்த தவறும் இல்லை என கூறி கடந்த ஆண்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து மாலா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 90 வயதான மூதாட்டி நாகலட்சுமி தனது சொத்துக்களை மூன்று மகள்களுக்கு எழுதிக் கொடுக்காமல் கடைசி காலத்தில் மகன் தன்னை கவனித்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் அவரது பெயருக்கு தான பத்திரம் எழுதி கொடுத்துள்ளார் என்றும் மகன் மீது வைத்த பாசம் மகனின் எதிர்காலம் கருதியே தான பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். மகனோ அல்லது மகளோ சரிவர தங்களை சரிவர பார்த்துக் கொள்ளாவிட்டால் தான பத்திரத்தை ரத்து செய்ய கூறுவது அவர்களின் உரிமை என்றும் தானப் பத்திரத்தை ரத்து செய்து வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவிலும், அதை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவிலும் எந்த தவறும் இல்லை எனக் கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோயில் நிலத்தில் தாராளமாக கல்லூரி கட்டிக் கொள்ளலாம்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!