×
 

நாக்கை அடக்கிப் பேசுங்க..! தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாவை அடக்கி பேச வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாடு அரசு தான் மாணவர்களை வஞ்சிக்கிறது என்றும் அரசியல் காரணங்களுக்காக பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு U TURN அடித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு பி எம் ஸ்ரீ திட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது எனவும் கூறினார். 

இதையும் படிங்க: வார்த்தையை விட்ட தர்மேந்திர பிரதான்....  கொதித்தெழுந்த திமுக எம்.பி.க்கள்... அனல் பறந்த நாடாளுமன்றம்...! 

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உரையை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள அவர் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்றும் இதனை பிரதமர் மோடி உயர்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என தனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின், நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம் என்றும் உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல எனவும் விமர்சித்தார்.

நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது என்ன திட்டவட்டமாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். 

 

 

இதையும் படிங்க: திமுக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கெடுத்து, நாசமாக்குகிறது... தர்மேந்திர பிரதான் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share