டிஐஜி மகேஷ் குமார் மீது பாலியல் புகார்.. சஸ்பெண்ட் உத்தரவு ரத்து..!
பாலியல் புகாருக்கு உள்ளான டி.ஐ.ஜி மகேஷ்குமாரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை போக்குவரத்து பிரிவில் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் மகேஷ் குமார். ஐபிஎஸ் அதிகாரியான இவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக போக்குவரத்து பிரிவில் காவலர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகார் உத்தரவு மீது டிஜிபி நசீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. குறிப்பாக இதில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து டி ஐ ஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக உள்த்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்து. புகார்தாரரின் வேண்டுகோளின் படி பாலியல் துன்புறுத்தல் புகார் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மகேஷ் குமார் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவை இல்லை என்றும் விசாரணைக் குழு அறிக்கை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனை டிஜிபி., தமிழக அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்துள்ளது.
இதையும் படிங்க: 350 ஆண்டுகால தர்காவை இடித்து தள்ளி வஃக்பு நிலத்தை ஆக்கிரமித்த திமுக... பகீர் கிளப்பும் தடா ரஹீம்..!
இதையும் படிங்க: வரலாற்றிலேயே முதல் முறை... நாளை மறுநாள் தரமான சம்பவம் செய்யப்போகும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!