குச்சி ஐஸு ச**ணுமா..? மேடையில் பச்சை பச்சையாகப் பேசிய திமுக பெண் நிர்வாகி..!
கலா மாஸ்டரை கூட்டிக்கொண்டு குட்டி யானையில் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே என்று பாட்டு பாடுகிறான்.
திமுக பேச்சாளர் சேலம் சுஜாதா மேடையில் பேசிய கெட்ட வார்த்தைகளும், தலைவர்களை ஒருமையில் பேசியதும் பெரும் சர்ச்சயை கிளப்பி வருகிறது.
சேலம் மேடையில் பேசிய அவர், ''மூன்று மீட்டிங் ஆரம்பிக்கிறானுங்க. நான்தான் முதலமைச்சர்... நான்தான் முதலமைச்சர் என்கிறார்கள். ஏன்டா தமிழ் மொழிக்காக செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தீர்களா? தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது செய்திர்களா? ஏண்டா *** .. மூணு மீட்டிங் ஆரம்பிச்சுட்டு என்ன திமிறா..? அன்னைக்கு நீ என்ன செய்தாய்? தனி விமானத்தில் கோவாவுக்கு ஒரு நடிகையை கூட்டிக் கொண்டு போனாய். நீ சொல்கிறாய் திமுகவை அழிப்பேன்... ஒழிப்பேன் என்று.
2026-ல் திமுக கொ**மால ஒன்னும் பண்ண முடியாது. நடிகர்களால் ஒன்னும் பண்ண முடியாது. ஏனென்றால் எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தார்கள்? சிவாஜி மாதிரி எல்லாம் ஒரு நடிகர் யாருமே கிடையாது. அவரது உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகமும் நடிக்கும். கண்ணும் நடிக்கும். அவரும் கட்சி ஆரம்பித்தார். அவர் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் நின்றார். ஆனால் தோற்றுப் போனாரு. அன்னைக்கு வெற்றி பெற்றது துரை சந்திரசேகர். திமுகவைச் சார்ந்தவர். இன்றைக்கு மாவட்ட கழகத்தினுடைய செயலாளர். இன்றைக்கும் சட்டமன்ற உறுப்பினர்.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!
பாவம் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். அவர் செத்ததுக்கு காரணம் வேறு யாரும் கிடையாது, பிரேமலதா. விஜயகாந்த்தான் பாவம் டிரீட்மென்ட் எடுத்துக் கொண்டு இருந்தார். அவரை வா கூட்டணி வைப்போம் வா என்று அழைத்து வந்து அவர் போயிட்டாரு... அப்புறம் என்ன ஒரு பெரிய விஷயம் தெரியுமா? டி.ராஜேந்திரன், பாக்யராஜ் எல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள். கமலஹாசனை நான் குறை சொல்ல மாட்டேன். எங்கள் கூட்டணியோடு இருக்கிறார். அவர் மாதிரி எல்லாம் யாருமே ஒரு அழகாக நடிக்க முடியாது. இன்னிக்கு திமுக கூட்டணியில் இருக்கிறார் என்றால் அவர் நல்ல ஒரு திறமையானவர்.
நான் ஒன்று மட்டும் சொல்கிறேன். இந்த நாட்டு மக்களுக்காக சீன் போடுகிறவர்கள் எல்லாம் ஜெயிக்க முடியாது. கொ**மால ஆட்டு குட்டி அண்ணாமலை. டைம் இல்லடா பைத்தியக்காரப் பயலே. உன்னை மாதிரி அரை லூசை நான் பார்த்ததே இல்லடா. டேய்.. ஏன்டா நான் தெரியாம கேட்கிறேன். தமிழ்நாட்டில் மட்டுமாடா டாஸ்மாக் வைத்திருக்கிறோம்.? இந்தியா முழுவதும் நடக்கிறது, உலகம் முழுவதும் நடக்கிறது. அவன் ஒரு லூசு... அவன மாதிரி ஒரு லூசு உலக வரலாற்றில் யாருமே கிடையாது. என்னவென்றால் பஞ்சிலே அடித்துக் கொள்கிறான். நீ எல்லாம் ஒரு தலைவன். அடித்துக் கொள்கிறான், அப்புறம் லண்டனுக்கு போகிறான். லண்டனுக்கு போய்விட்டு வந்து எங்களுடைய முதலமைச்சரை மரியாதை இல்லாமல் பேசுகிறான்.
என்னுடைய தளபதியை பேசுபவனை நான் சும்மா விட மாட்டேன். அதைப் பற்றி எனக்கு கவலையே கிடையாது. என் தம்பி என்னை தூக்கிப் போட்டால் போதும். அதுதான் திமுக. மோடி என்ன செய்தார்? அதை கேளு முமொழிக் கொள்கை இன்று தேவையா? அன்றைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் இரண்டு மொழி தேவை போதும் என்று சொன்னார்கள். 1938 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தமிழ் வாழ்க என்று அன்றைக்கே சொன்னவர் தந்தை பெரியார். ஆனால் இன்றைக்கு வேண்டுமென்று மாட்டை கடித்து, மனுசனை கடித்து எப்படியாவது திமுகவை ஒழித்து விட வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவதை விட்டுவிட்டு எப்படி மிரட்டுகிறாய்?
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளி கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படும் என்று சொன்னீர்கள். ஆனால் இந்த பட்ஜெட்டிலே முதலமைச்சர் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதற்காக மாணவர்களுக்கு இந்த பட்ஜெட்டிலே நிதி ஒதுக்கி இருக்கக்கூடிய ஒரே ஒரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆட்டுக்குட்டி அண்ணாமலையே அடக்கிவாசி. உன்னை மாதிரி நாங்கள் எல்லாம் எவ்வளவு பேரை பார்த்திருக்கிறோம். நேருவை பார்த்திருக்கிறோம்... இந்திராகாந்தியை பார்த்திருக்கிறோம். மோடி மாதிரி உலக வரலாற்றில் யாரும் திருக்குறள் பேச முடியாது.
ஒருமுறை அப்படித்தான் சொல்கிறார் மோடி அடேயப்பா. ஆட்டு குட்டி அண்ணாமலை நான் இங்கே ஒன்று சொல்கிறேன். என் தம்பி சிற்றரசு மாவட்ட செயலாளர். நான் அவரிடம் பெர்மிஷன் கேட்டுக்கொள்கிறேன். நீ அரவக்குறிச்சியில் போய் தோற்று விட்டாய். கோயம்புத்தூரில் தோற்றுவிட்டாய். நான் என் தம்பியிடம் கேட்கிறேன். எங்கள் சிற்றரசியிடம் வந்து நீ மாநகராட்சி கவுன்சிலராக ஜெயித்து பாருடா. உனக்கு மட்டும் தான் பேச தெரியுமா? எங்கள் கட்சியில் கிளை கழக செயலாளர் கூட பேச்சாளர்.
ஆட்டுக்குட்டி அண்ணாமலை கோயம்புத்தூரில் என்ன செய்தார் தெரியுமா? கலா மாஸ்டரை கூட்டிக்கொண்டு குட்டி யானையில் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே என்று பாட்டு பாடுகிறான். மக்கள் அப்படியா? வடிவேலு சொன்னது போல் மாப்பு வச்சுட்டாயா.. இப்போது ஒன்றுமே இல்லையேஎ. இன்னொரு அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் உனக்கு சீட்டு கொடுத்தார். இந்த அம்மா சொல்கிறது இந்தி என்று சொன்னால் எனக்கு கோபம் வரும் என்கிறது. அடேங்கப்பா... தாமரை மலர்ந்தே தீருமாம். ஆட்டுக்குட்டி அண்ணாமலை நீ அடக்கி வாசி. என்னைக்குமே நீ ஒன்னும் பண்ண முடியாது.
இன்னொருத்தன் சீமான் பைத்தியக்கார பையன். அவன் அரை லூசா? முக்கால் லூசா? அவன் சொன்னான் பாரு. ஏண்டா பிரபாகரன் எவ்வளவு பெரிய தலைவன். பிரபாகரனுக்கு அப்போதே சப்போர்ட் செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். அவரை சமையல்காரனை போல் பேசுகிறான் சீமான். அப்படியே உட்கார்ந்து அவர் 12 கிலோ ஆமை கறி வைத்தாராம். இந்த சீமான் ஆமைக்கு பிறந்திருப்பானோ இந்த சீமான்? இல்லையென்றால் 12 கிலோ எவனாவது தின்பானா? இட்லி பிரித்தால் கறி வருகிறதாம். டேய் முட்டாள் பயலே... நீங்கள் எல்லாம் வாய் வெளியே பேசிக் கொண்டிருப்பீர்கள். திமுகவை ஒழிப்பேன் என்கிறீர்கள்.
அணில் 🐿️ குஞ்சுகளை கதறவிட்ட சேலம் சுஜாதா அவர்களின் சிறப்பான பேச்சு. #DMK4TN #nambiyur_dmk_youth_wing pic.twitter.com/AE7iULq4VA
— M M RAJKUMAR DMK (@rajdmkyouthwing) April 8, 2025
நான் என்ன சொல்கிறேன் என்றால் அடக்கி வாசியுங்கள். நீங்கள் ஒன்றுமே பண்ண முடியாது. ஏதோ நேற்று பெய்த மழையில் இன்றைக்கு பூத்த காளான் கிடையாது. ஏதோ நேற்று அரசியலுக்கு வந்து முதலமைச்சராக இல்லை. ஸ்டாலினின் தியாகம் என்ன தெரியுமா?'' என ஆங்காங்கே பச்சை பச்சையாய் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அனுமதி இல்லாத படிப்பை தொடங்கும் பெரியார் பல்கலை., தடுத்து நிறுத்த அன்புமணி வலியுறுத்தல்..!