திருவள்ளூரில் சந்திக்கிறேன்! திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு..!
பாஜக அரசை கண்டித்து திருவள்ளூரில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்ட தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் தான் தொகுதி மறு சீரமைப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது.
இதேபோல் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றால்தான் தமிழகத்திற்கு உரித்தான நிதியை கொடுப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மும்மொழி கொள்கையின் மூலம் ஹிந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்ளதாக கூறியும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மத்திய அரசின் இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் பல தரப்பட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மும்மொழிக் கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் திமுக..! சித்து, ஜெகனுடன் சந்திப்பு.. கடுப்பில் பிஜேபி..!
இந்த நிலையில் திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக தொகுதி மறு சீரமைப்பு, ஹிந்தி திணிப்பு ஆகியவற்றை கண்டித்து திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும்_தமிழ்நாடு வெல்லும்! என்ற கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.திருவள்ளூரில் உங்களைச் சந்திக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா புடவை பிடித்து இழுத்த திமுக, நாகரீகம் பற்றி பேசலாமா..? அலறவிட்ட நிர்மலா சீதாராமன்..!