அங்கு என்ன தெரிகிறது..? அமைச்சர் வீட்டின் முன்பு சாவகாசமாக சேர் போட்டு உட்கார்ந்த திமுகவினர்..!
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இல்லம் முன்பாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அந்த இல்லம் முன்பாக திமுகவினர் குவிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரர் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வரக்கூடிய சூழலில் வீட்டின் முன்பாக திமுகவினர் குவிந்துள்ளனர். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்ததுறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்குச் சொந்தமான சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனம், திருச்சி மற்றும் கோவையில் உள்ள இல்லங்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி தில்லை நகரில் ஐந்தாவது கிரில் அமைந்துள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இல்லத்திலும், தில்லைநகர் பத்தாவது குறுக்கு தெருவில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த தொழிலதிபர் ராம ஜெயம் இல்லத்தில் சென்னையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையிலிருந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த இடி.. திருச்சி, கோவையிலும் இறங்கிய ED... ஆடிப்போன கே.என்.நேரு...!
கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வங்கி கணக்கில் வந்து அதிக பணம் பரிவர்த்தனை நடைபெற்றதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசின் மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் ஒப்பந்ததாரவும் டிவிஹெச் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிலையில் வந்து திருச்சி தலைநகரில் இரண்டு இடங்களில் நடைபெற்று வரும் இந்த அமலக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் போது இரண்டு வங்கி அதிகாரிகளையும் அமலக்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி திருச்சி ஐந்தாவது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லம் முன்பாக 50க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்துள்ளனர். அதுவும் திமுகவினர் அமைச்சர் வீட்டின் முன்பாக ஷேர் போட்டு அமர்ந்து, அமலாக்கத்துறையினர் என்ன செய்கிறார்கள் என நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் வீட்டின் உள்ளே சோதனையில் ஈடுபட்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்பளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தலில் விஜய்யை திமுக சந்திக்கும்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட அமைச்சர் கே.என். நேரு.!!