எதற்கும் வக்கில்லாத திமுக .. நாடாளுமன்றத்தில் கிழித்து தோரணம் கட்டிய தம்பிதுரை..! ஆடிப்போன திமுக எம்.பி-க்கள்
. நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக வெற்று பேப்பர்களை வைத்து இன்று வரை அரசியல் செய்கிறது. எல்லாவற்றையும் தவறாகவே செய்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு வந்து நாடகமாடுகிறது.
'ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவோ, நீட்டை ரத்து செய்யவோ வக்கில்லாத கட்சிதான் திமுக' என அதிமுக எம்.பி, தம்பித்துரை மாநிலங்களவையில் ஆவேசமாகப்பேசி திமுக எம்.பி.,க்களை தெறிக்கவிட்டார்.
திமுக எம்.பி.வில்சன் சபாநாயகர் இருக்கையில் இருக்கும் போதே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் மாநிலங்களவை அதிமுக எம்.பியான தம்பிதுரை. இதனால் மாநிலங்களை ரணகளமானது.
தம்பிதுரை மாநிலங்களவையில், ''இந்த நான்காண்டு காலத்தில் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது தொடங்கினார்களா? ஒரு கல்லூரி கூட கொண்டு வரவில்லை. இது மிகப்பெரும் தோல்வி. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக வாக்குறுதி அளித்தது. அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல நீட் தேர்வை ரத்து செய்தார்களா? நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுக கூட்டணி வகித்த காங்கிரஸ் ஆட்சியில்தான். துணை முதல்வர் உதயநிதி கையெழுத்து இயக்கம் நடத்தினாரே..? என்னாச்சு? மக்களையும், மொத்த நாட்டையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: என்ன நடவடிக்கை எடுத்தாலும் மகிழ்ச்சிதான்: டேக் இட் ஈஸி வேல்முருகன்..!
பிரதமர் மோடி, தன் பதவிக் காலத்தில், 1,20,000 எம்.பி.பி.எஸ்., மருத்துவ இளநிலை படிப்பு இடங்களை அறிவித்தார். தற்போது, மேலும் 70,000 இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். எம்.பி.பி.எஸ்., இடங்களை போலவே, முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களையும் அதிகரிக்க வேண்டும். சுகாதாரத் துறையில், தமிழகம் மிகச்சிறந்து விளங்கி வருகிறது. இதற்கு காரணம், அதிமுக., ஆட்சிதான்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணியருக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு பராமரிப்பு பொருட்கள் அடங்கிய, 'பேபி கேர்' எனப்படும் பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம், அம்மா இன்சூரன்ஸ் திட்டம், அம்மா பார்மஸி என நிறைய கொண்டு வரப்பட்டன. ஆனால், திமுக அரசு இவற்றை எல்லாம் சீரழித்து விட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 11 மருத்துவக் கல்லுாரிகள், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரிகூட கொண்டு வரப்படவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கப்படவில்லை. மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், 'நீட்' தேர்வை கொண்டு வந்தது. ஆனால், தற்போது அதை ரத்து செய்வோம் என நாடகமாடுகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக வெற்று பேப்பர்களை வைத்து இன்று வரை அரசியல் செய்கிறது.
எல்லாவற்றையும் தவறாகவே செய்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு வந்து நாடகமாடுகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் மருத்துவர்கள் தாக்கப்படுகின்றனர். ரவுடிகளால் மருத்துவமனைகள் சூறையாடப் படுகின்றன. டாக்டர்களுக்கு பாதுகாப்பில்லை. எனவே, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவோ, நீட்டை ரத்து செய்யவோ வக்கில்லாத கட்சி தான் திமுக. திமுகவின் 1000 கோடி டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வரவேண்டும். மதுபான முறைகேடு ஊழலில் கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றதுபோல், முதல்வர் ஸ்டாலினும் சிறைக்கு செல்வார்'' எனப் பேசினார்.
தம்பிதுரை பேசும்போது, மாநிலங்களை தலைவர் நாற்காலியில் அமர்ந்து சபையை வழிநடத்தியவர் திமுக - எம்.பி., வில்சன். திமுக அரசை, தம்பிதுரை சரமாரியாக தாக்கிப் பேசிக் கொண்டிருக்க, அவரை எதிர்த்து மற்ற திமுக, எம்.பி.,க்கள் கொந்தளித்து கூச்சலிட்டனர். ஆனால், வில்சனோ எதுவும் செய்ய முடியாமல் திகைத்தபடியே தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: இல்லாத பிரச்சனையை கையில எடுக்காதீங்க.. நாங்களும் தமிழர்கள் தான்! லெப்ட் ரைட் வாங்கிய தமிழிசை..!