×
 

நீ பற்ற வைத்த நெருப்பு உன்னை... உயிருக்கு உலை வைக்கப் பார்த்த உருவ பொம்மை எரிப்பு... பதறிப்போன திமுக உ.பி.க்கள்..!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரிக்க முற்பட்ட போடி நகர் திமுகவினர். தவறுதலாக போடி நகர் 1வது வார்டு செயலாளர் சந்திரசேகர் மீது தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. 

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரிக்க முற்பட்ட போடி நகர் திமுகவினர். தவறுதலாக போடி நகர் 1வது வார்டு செயலாளர் சந்திரசேகர் மீது தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. 


மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தொடர்பாக தமிழக எம்பிக்கள் கேள்விகளை முன்வைத்த நிலையில் அதற்கு  பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்று கூறிவரும் தமிழக எம்பிகள் நாகரிமற்றவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடைய உருவ பொம்மை எரிக்கும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர் .

இந்நிலையில் தேனி மாவட்டம் போடி நகர் தேவர் சிலை முன்பாக திமுக நகர கழக செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை 50க்கும் மேற்பட்ட திமுகவினர் எரிக்க முற்பட்டனர். 

இதையும் படிங்க: தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த எம்.பி.க்களை அநாகரீகமாக பேசுவதா.? தர்மேந்திர பிரதானை வறுத்தெடுத்த செல்வபெருந்தகை!

இந்நிலையில் போடி 1வது வார்டு செயலாளர்  சந்திரசேகர் மீது தீ பற்றியது. சுதாரித்துக் கொண்ட சந்திரசேகர் தனது வேட்டியை கழட்டி விட்டு தன்னை தற்காத்துக் கொண்ட நிலையில் போராட்டத்தை கைவிடாமல் திமுகவினர் தொடர்ந்தனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிக்க முற்பட்ட நிலையில் திமுக நிர்வாகி மீது தீப்பற்றி நிலையிலும் போராட்டத்தை போடி நகர் கழக நிர்வாகிகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போடி நகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து தீக்காயம் ஏற்பட்ட  சந்திரசேகரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தனர்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக உரிமை மீறல் நோட்டீஸ்..! கனிமொழி அதிரடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share