மோமோஸ் சாப்பிட போறீங்களா உஷார்!! கிலோ கணக்கில் கெட்டுப்போன மாமிசம்.. பிரிட்ஜுக்குள் நாயின் தலை!!
பஞ்சாப்பில் மோமோஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றின் பிரிட்ஜில் துண்டிக்கப்பட்ட நாயின் தலை இருந்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உலகளாவிய பொருளாதாரத்தால் மக்கள் குறிப்பிட்ட உணவுகள் என்று அல்லாமல், அனைத்து நாடுகளின் உணவையும் உண்டு சுவைபார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சைனீஸ், இத்தாலி, தாய் மற்றும் கொரியன் வகை உணவுகள் இந்தியாவில் வேகமெடுத்து வருகின்றன. எல்லா பகுதிகளிலும் எல்லா உணவுகளும் கிடைக்கும் என்றாலும், அவற்றின் தரம் என்ன என்பதில் தான் கேள்வி அடங்கி உள்ளது. தரமற்ற சாலையோர கடைகளில் வாங்கி உண்ணும் உணவுகள் பெரும்பாலும் நமது ஆரோக்கியத்திற்கு கேடு செய்வது நிதர்சன உண்மை.
எனவே குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி உண்ணும் எந்த வகை உணவு பொருள் என்றாலும், அவை தயாரிக்கப்படும் விதம், விற்பனை செய்யப்படும் விதம் ஆகியவை மிகவும் முக்கியம். இந்த வகையில் பார்ப்பதற்கு வெளியில் நன்றாக இருக்கும் சில கடைகளில், சமையலறையில் அதே அளவு சுத்தமும், சுகாதாரமும் பேணப்படுவது இல்லை என்பதே நிதர்சனம். மக்களும் கடைகள் பெரியதாக இருந்தால், உணவும் சுத்தமாக இருக்கும் என்ற எண்ணத்துடனே உணவருந்த வருகின்றனர். ஆனால் கொள்ளை லாபம் பார்க்க நினைக்கும் சில உணவு விடுதிகள், பணத்தில் காட்டும் அக்கறையை மக்கள் உடல்நலனில் காட்டுவது இல்லை..
இதையும் படிங்க: சிவசேனா தலைவர் கொலை.. 'என்கவுண்டரை' தொடர்ந்து 3 பேர் கைது.. மர்மம் நீடிப்பு..!
இப்படிப்பட்ட ஒரு கடை பஞ்சாப்பில் அதிகாரிகள் ஆய்வில் வெளிப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக ப்ரிட்ஜில் நாயின் தலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ஆய்வு செய்யச் சென்ற அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆமாம்.. பஞ்சாப்பின் மொஹாலியில் உள்ள மாதூர் கிராமத்தில் மோமோ மற்றும் ஸ்பிரிங் ரோல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உணவு தயாரிக்கும் விதம் கேள்விக்குறியதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்படி அந்த தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு குளிர்சாதன பெட்டியில் ஒரு நாயின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டுபிடித்ததை அடுத்து, அங்குள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்குள்ள சுகாதாரமற்ற நிலைமைகள் குறித்து விசாரணையைத் தொடங்கினர். அது ஒரு பக் வகை நாயின் தலை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த தொழிற்சாலையில் கிலோ கணக்கில் அழுகிய மற்றும் கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களின் மாதிரிகளையும் அதிகாரிகள் கண்டு எடுத்தனர். அவற்றில் ஸ்பிரிங் ரோல்ஸ், மோமோ மற்றும் சாஸ்கள் அடங்கும்.
இதற்கிடையில், நாயின் துண்டிக்கப்பட்ட தலை, கால்நடை துறையின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிய, கால்நடை துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மொஹாலி நகராட்சி நிறுவனம் , தொழிற்சாலையின் உரிமையாளருக்கு அழுகிய இறைச்சிகளை வைத்திருந்தற்காக ₹ 12,000 அபராதம் விதித்தது , அதே நேரத்தில் பிளாஸ்டிக் பைகள் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்ததற்காக ₹ 10,000 அபராதமும் விதித்தது.
இதையும் படிங்க: பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக் கொலை.. பைக்கில் துரத்திச் சென்று கொன்ற மர்ம நபர்கள் யார்?