×
 

சாட்ஜிபிடி, டீப் சீக் ஏஐ செயலிகளை பயன்படுத்தவேண்டாம்: நிதி அமைச்சகம் உத்தரவு

சாட்ஜிபிடி, டீப் சீக் பயன்படுத்தவேண்டாம்: நிதி அமைச்சகம்

செயற்கை நுண்ணறிவு செயலிகளான சாட்ஜிபிடி(ChatGPT) மற்றும் டீப்சீக்(DeepSeek) மென்பொருட்களை அலுவல்ரீதியான பணிகளுக்கு அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது என மத்திய நிதிஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற ஏஐ செயலிகளைப் பயன்படுத்தும்போது, அரசின் நிதி தொடர்பான ரகசிய ஆவணங்கள், புள்ளிவிவரங்கள், ரகசியதகவல்கள் வெளியே கசிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், அலுவல் ரீதியான பணிகளுக்கு இந்த ஏஐ செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என நிதிஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இந்த உத்தரவை நிதி அமைச்சகம் அதிகாரபூர்வமாக பிறப்பிக்கவில்லை என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தாலும், வாய்மொழியாகப் பிறப்பிக்கப்பட்டு அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இதேபோன்ற உத்தரவுகளை தங்கள் அதிகாரிகளுக்கு பிறப்பித்து டீக்சீக், சாட்ஜிபிடி செயலிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. 
சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் அல்ட்மேன் , மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நிதி அமைச்சகத்தின் பிரதிநிதிகள், சாட்ஜிபிடி, டீப்சீக் நிறுவனத்தின் சார்பில் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், நிதி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உண்மைதான் ஆனால், எழுத்துபூர்வமாக இல்லை, நிதிஅமைச்சகத்துக்குள் மட்டும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.
ஓபன்ஏஐ நிறுவனம் இந்தியாவில் தற்போது காப்பிரைட் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. முக்கிய ஊடகங்கலுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஓபன்ஏஐ நிறுவனம் வழக்கும் தொடரந்து வாதிட்டு வருகிறது.
அதில் இந்தியாவில் சர்வர்கள் இல்லாத நிலையில், இந்திய நீதிமன்றங்கள் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஓபன்ஏஐ நிறுவனம் தனது பதில் மனுவில் தெரிவித்தள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அம்ரித்சர் வந்த நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. அமெரிக்க ராணுவ விமானத்தில் பயணம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share