×
 

கண்டலேறு அணையிலிருந்து தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. மலர் தூவி வரவேற்ற அதிகாரிகள்..

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கண்டல் ஏறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.

கோடை காலத்தை முன்னிட்டு சென்னையில் குடிநீர் தேவையானது அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. முன்னதாக இந்த ஆண்டு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக முழுவதும் வெப்பநிலையானது நாளுக்கு நாள் இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் குடிநீரின் தேவையும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா  ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் திறக்க வலியுறுத்தப்பட்டது.

இதனை அடுத்து தமிழக ஆந்திரா மாநிலத்தின் ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நான்கு டிஎம்சி தண்ணீர் என மொத்தம் எட்டு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு ஆந்திர மாநிலம் வழங்க வேண்டும்.

இதையும் படிங்க: காரில் வருபவர்களுக்கு பதவி கிடையாது... ஆதவ் அர்ஜுனாவை மறந்து பொய்களை அள்ளி வீசிய புஸ்ஸி ஆனந்த்...!

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தண்ணீரை  விடுவிக்கும்படி தமிழக நீர்வளத்துறை வலியுறுத்திய நிலையில் தற்போது கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்து கடந்த 23ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

 அதைத்தொடர்ந்து நேற்று 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 800 கன அடி தண்ணீர். அதன்படி ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆனது தமிழக எல்லையோர பகுதியான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் இருக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதிநீரை தமிழக நீர்வளத் துறையினர் மலர் தூவி வரவேற்றனர்.

இதையும் படிங்க: கூட்டணிக்கு அதிமுக வைத்த டிமாண்ட்.. டெல்லிக்கு அழைத்த அமித் ஷா... அண்ணாமலை ஆட்டம் க்ளோஸ்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share